முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க், வெறித்தனமான ஒர்க்அவுட்; இன்ஸ்டாவில் பதிவிட்ட சமந்தா
பிரபல நடிகை சமந்தா, சோஷியல் மீடியாவில் தனது கருத்துகளையும், தன்னுடைய வாழ்க்கையின் முக்கியமான தருணங்களையும் பதிவிட தவறுவதே இல்லை. தன்னுடைய காதல், திருமணம், திருமண முறிவு, உடல்நிலையில் தொய்வு, அதில் இருந்து மீள அவர் எடுக்கும் முயற்சிகள் என அனைத்தையும் தனது ரசிகர்களுக்கு வெளிப்படுத்துவதுண்டு. சென்ற ஆண்டில், தான் மயோடிசிஸ் என்கிற நோயினால் பாதிக்கப்ட்டுள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் உடற்பயிற்சி, வாழ்க்கை முறையில் மாற்றம் போன்றவை மூலம், அதில் இருந்து சிறிது சிறிதாக மீண்டு வருவதை பேட்டிகளில் அவர் தெரிவித்தார். தற்போது, இன்ஸ்டாகிராமில் அவர் சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். அதில், ஒரு புகைப்படத்தில் புதுவிதமான ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்திருந்தார்.
ஹைபர்பரிக் ஆக்ஸிஜன் சிகிச்சை என்றால் என்ன?
அவர் அந்த புகைப்படத்தில், ஹைபர்பரிக் ஆக்ஸிஜன் சிகிச்சையை உட்படுத்திக்கொண்டுள்ளார். அந்த சிகிச்சை, உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், நோய்த்தொற்றுகளைக் குணப்படுத்தவும் மற்றும் சேதமடைந்த திசுக்களை சரிசெய்யவும் உதவுகிறது. ஹைபர்பரிக் ஆக்ஸிஜன் சிகிச்சை முறை என்பது, அழுத்தமான சூழலில், தூய ஆக்ஸிஜனை சுவாசிக்கும் ஒரு மருத்துவ முறையாகும். அதில் உட்படுத்தப்படும் காற்றழுத்தம், சாதாரண காற்றழுத்தத்தை விட 2 முதல் 3 மடங்கு அதிகமாகும். அதனால், உங்கள் நுரையீரல் சாதாரண காற்றழுத்தத்தில் சுவாசிக்கப்படும் தூய ஆக்ஸிஜனை விட, அதிக அளவு ஆக்ஸிஜனை உள்ளிழுக்க முடியும். இந்த கூடுதல் ஆக்ஸிஜன், பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உதவுகிறது. அதோடு நோயை குணமாக்கும் ஸ்டெம் செல்கள் வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.