அடுத்த செய்திக் கட்டுரை
திருவண்ணாமலையில், சகோதரிகளுடன் கிரிவலம் சென்ற ரம்யா பாண்டியன்
எழுதியவர்
Venkatalakshmi V
Apr 28, 2023
09:18 am
செய்தி முன்னோட்டம்
கோலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகை ரம்யா பாண்டியன். நடிப்பிற்கு சவால் விடும் கதாபாத்திரம், அழுத்தமான திரைக்கதை என தேர்வு செய்து நடிக்கும் ரம்யா பாண்டியன்,
கடைசியாக மம்மூட்டியுடன் 'நண்பகல் நேரத்து மயக்கம்' என்ற படத்தில் நடித்திருந்தார்.
'மொட்டை மாடி போட்டோ ஷூட்' மூலமாக பிரபலமடைந்த ரம்யா பாண்டியன், சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பலருக்கும் பரிச்சயம் ஆனார்.
அதை தொடர்ந்து படங்களை தேர்வு செய்து நடித்தவர், 80'களின் பிரபல நடிகரான அருண் பாண்டியனின் அண்ணன் மகள் என்பது கூடுதல் செய்தி.
தற்போது ரம்யா பாண்டியன், அவரது சகோதரி சுந்தரி மற்றும் அருண் பாண்டியனின் மகளும், நடிகையுமான கீர்த்தி பாண்டியன் ஆகிய மூவரும், திருவண்ணாமலையில் சுவாமி தரிசனம் செய்திவிட்டு, கிரிவலம் சென்றுள்ளனர்.