Page Loader
'#stopfakenews': வதந்திகளுக்கு காட்டமாக மறுப்பு தெரிவித்த நித்யா மேனன் 
வதந்திகளுக்கு காட்டமாக மறுப்பு தெரிவித்த நித்யா மேனன்

'#stopfakenews': வதந்திகளுக்கு காட்டமாக மறுப்பு தெரிவித்த நித்யா மேனன் 

எழுதியவர் Venkatalakshmi V
Sep 26, 2023
08:38 pm

செய்தி முன்னோட்டம்

இன்று இணையத்தில், நடிகை நித்யா மேனன், தமிழ் நடிகர் ஒருவர் தன்னை துன்புறுத்தியதாக தெரிவித்ததாக செய்தி வைரலானது. மேலும், தெலுங்கு சினிமாவில் தனக்கு இதுவரை எந்த பிரச்சனையும் வரவில்லை என்றும், ஆனால், தமிழ் சினிமா ஹீரோ ஒருவர், அவரை துன்புறுத்தியதாகவும் அவர் ஒரு பேட்டி ஒன்றில் கூறியதாக கூறப்பட்டது. இந்த செய்திக்கு தற்போது நித்யா மேனன் கட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் கூறியதாவது, "நான் இப்படி ஒரு பேட்டியும் அளிக்கவில்லை. இப்படி ஒரு வதந்தி எங்கிருந்து தோன்றியது என கண்டுபிடிக்க உதவுங்கள். அந்த நபரை கடுமையாக எதிர்கொள்வேன்" என பொருள்படும்படி பதிவிட சில மணி துளிகளிலேயே, இந்த வதந்தியின் தொடக்க புள்ளியை கண்டுபிடித்து விட்டதாகவும், #stopfakenews எனவும் பதிவிட்டுள்ளார்.

Instagram அஞ்சல்

மறுப்பு தெரிவித்த நித்யா மேனன் 

Instagram அஞ்சல்

மறுப்பு தெரிவித்த நித்யா மேனன்