
நடிகை மேகா அகாஷிற்கு விரைவில் திருமணம்; யார் மாப்பிளை?
செய்தி முன்னோட்டம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகை மேகா ஆகாஷ்.
பேட்ட, என்னை நோக்கி பாயும் தோட்டா, வந்தா ராஜாவாதான் வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் மேகா ஆகாஷ்.
சொந்த குரலில் டப்பிங் பேசும் மிக சில தமிழ் நடிகைகளில் ஒருவர் மேகா என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் தற்போது திருமணத்திற்கு தயாராகி விட்டார்.
நேற்று இவருக்கு நடிகர் சாய் விஷ்ணு என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் சாய் விக்னேஷும், மேகாவும் 'பேசினால் போதுமே அன்பே' என்ற குறும்படத்தில் இணைந்து நடித்ததாக கூறப்படுகிறது.
இவர்களின் திருமண தேதி குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
மணமக்களுக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Actress @akash_megha is engaged to Actor #SaaiVishnu
— Ramesh Bala (@rameshlaus) August 23, 2024
They both acted together in a short-film "Pesinal Pothume Anbe" https://t.co/XO0Wqhu5KN
Congratulations pic.twitter.com/YUxmhqiVWw