Page Loader
பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக நடிகை ஈஷா குப்தா மனம் திறந்துள்ளார் 
நடிகை நிஷா குப்தா தமிழில் 'யார் இவன்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்

பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக நடிகை ஈஷா குப்தா மனம் திறந்துள்ளார் 

எழுதியவர் Srinath r
Oct 01, 2023
01:47 pm

செய்தி முன்னோட்டம்

ஃபெமினா மிஸ் இந்தியா பட்டம் வென்றவரும் பாலிவுட் நடிகையுமான ஈஷா குப்தா படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக மனம் திறந்துள்ளார். நடிகை ஈஷா குப்தா தமிழில் 'யார் இவன்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் அளித்த நேர்காணலில் தான் இயக்குனர்களால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டதை பகிர்ந்து கொண்டு உள்ளார். அண்மையில் ஸ்பாட் பாய்ஸ் (Spotboye) இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது. " நான் நடிக்க தொடங்கிய காலத்தில் தயாரிப்பாளர்கள் என்னிடம் பாலியல் ரீதியான சலுகைகளை எதிர்பார்த்தார். ஆனால் நான் அதில் ஈடுபட முற்றிலுமாக மறுத்துவிட்டேன்" "அதன் விளைவாக அந்த தயாரிப்பாளர் படக்குழுவினரிடம் என்னை படத்தில் இருந்து நீக்க வற்புறுத்தினார்" என கூறினார்.

2nd card

தயாரிப்பாளருக்கு ஒத்துழைக்காததால் பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டது

பாலியல் ரீதியான சலுகைகளை நடிகை ஈஷா குப்தா வழங்க தயாராகாததால் அவருக்கு பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். "நான் அவர்களுக்கு ஒத்துழைக்காததால் எனக்கு பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. என்னைப் பற்றி பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டன". "வெளியூர் படப்பிடிப்பின் போது நான் அவர்கள் வலையில் விழுந்து விடுவேன் என நினைத்தார்கள்" "அவர்களின் நோக்கம் எனக்கு புரிந்து விட்டதால் நான் மேக்கப் கலைஞரை எப்போதுமே அருகில் வைத்திருந்தேன்" இவ்வாறு தனக்கு தொடக்க காலத்தில் ஏற்பட்ட இரண்டு பாலியல் சீண்டல்களை ஈஷா குப்தா பகிர்ந்து கொண்டு உள்ளார்.