"ராயன்" படத்தில் நடிக்கும் அபர்ணா பாலமுரளியின் போஸ்டர் வெளியீடு
செய்தி முன்னோட்டம்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர் ரஹ்மானின் இசையில், தனுஷ் நடித்து, இயக்கியுள்ள திரைப்படம் 'ராயன்' ஆகும்.
இதற்கு முன், 'பவர் பாண்டி' என்ற காதல் படத்தை இயக்கி இருந்த தனுஷ், தற்போது அதிரடி வன்முறை படத்தில் இறங்கியுள்ளதாக தெரிகிறது.
சில நாட்களுக்கு முன் இப்படத்தின் பெயரையும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் 'ராயன்' படக்குழு வெளியிட்டது.
இப்படத்தின் முதல் போஸ்டர், இரண்டு தினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகியது.
நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், தற்போது அபர்ணா பாலமுரளியின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
அபர்ணா பாலமுரளியின் போஸ்டர் வெளியீடு
Introducing @Aparnabala2 from the world of #Raayan 💥@dhanushkraja @arrahman @iam_SJSuryah @selvaraghavan @prakashraaj @officialdushara @kalidas700 @sundeepkishan @omdop @editor_prasanna @PeterHeinOffl @jacki_art @kavya_sriram @kabilanchelliah @theSreyas @RIAZtheboss pic.twitter.com/RtorQUZ1lr
— Sun Pictures (@sunpictures) February 25, 2024