சமந்தா விவகாரம்: நேரடியாக ராகுல் காந்தி-யை டேக் அறிக்கை வெளியிட்ட நடிகை அமலா
காங்கிரஸ் தலைவரும், தெலுங்கானா அமைச்சருமான கொண்டா சுரேகாவிற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததில் பிஆர்எஸ் செயல் தலைவர் கேடி ராமாராவ் அல்லது கேடிஆர் பங்கு வகித்ததாக சுரேகா நேற்று குற்றம் சாட்டியிருந்தார். மேலும் பல அவதூறு கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார். இது ரசிகர்களின் பலத்த எதிர்ப்பினை ஈர்த்தது மட்டுமின்றி தெலுங்கு திரையுலகமே கண்டனங்களை தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் நடிகை அமலா, சமந்தா விவகாரத்தில் தன்னுடைய கணவர் நாகர்ஜூனாவின் பெயருக்கு களங்கம் விளைவித்த அமைச்சரின் கருத்திற்கு காட்டமான பதில் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் நேரடியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியையும், பிரியங்கா காந்தியையும் டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
Twitter Post
அமைச்சர் கூறிய சர்ச்சையான விஷயம் என்ன?
தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மாநாட்டு மையத்தை இடிக்காமல் இருக்கவேண்டும் என்றால், அவரது மருமகள் சமந்தாவை தன்னிடம் அனுப்புமாறு KTR தெரிவித்ததாகவும், அதனால், நாகார்ஜுனா சமந்தாவை கேடிஆரிடம் போகச் சொல்லி வற்புறுத்தியதாகவும் சுரேகா பகீர் குற்றசாட்டை வைத்தார். மாமனார் நாகர்ஜூனாவின் வற்புறுத்தலை சமந்தா ஏற்க மறுத்ததனால், அது விவாகரத்துக்கு வழிவகுத்தது என தெரிவித்தார் சுரேகா. மேலும், "சமந்தா-நாக சைதன்யா விவாகரத்துக்கு கேடிஆர் தான் காரணம். இவரால் பல ஹீரோயின்கள் சீக்கிரமே திருமணம் செய்து கொண்டனர். போதைக்கு அடிமையாகி ரேவ் பார்ட்டிகளுக்குச் சென்றார். பிளாக்மெயில் செய்து பலரை தொந்தரவு செய்தார்." என்றார்.
வலுத்த கண்டனங்களும், மன்னிப்பு கேட்ட அமைச்சரும்
அமைச்சரின் கருத்திற்கு நாகார்ஜுனா , சமந்தா, நாக சைதன்யா உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், நடிகை அமலா,"அமைச்சரே, என் கணவரைப் பற்றி ஒரு துளிகூட வெட்கமோ உண்மையோ இல்லாமல் உங்களுக்கு ஊட்டமளிக்கும் கண்ணியம் இல்லாதவர்களை நம்பி நம்புகிறீர்களா? இது உண்மையிலேயே வெட்கக்கேடானது. தலைவர்கள் தங்களை சாக்கடையில் தாழ்த்திக் கொண்டு குற்றவாளிகளைப் போல நடந்து கொண்டால், நம் நாட்டின் கதி என்ன?" என காட்டமாக பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் இன்று காலை, சமந்தா விவகாரம் குறித்து தான் கூறிய வார்த்தைகளை திரும்ப பெறுவதாக அமைச்சர் மன்னிப்பு தெரிவித்துள்ளார்.