பிவி சிந்து-வெங்கடா தத்தா சாய் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் நடிகர் அஜித் பங்கேற்பு
பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, தொழிலதிபர் வெங்கட தத்தா சாயியை உதய்பூரில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினர் தங்களது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்காக ஹைதராபாத்தில் செவ்வாய்க்கிழமை பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினர். இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர் அஜித்குமார் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். கருப்பு நிற உடையில், க்ளீன் ஷேவ் லுக்கில், 'குட் பேட் அக்லீ' படத்திற்காக சமீபத்தில் வெளியான இளமை தோற்றத்தில் அஜித் வந்திருந்தார். உடன், அவரது மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகளும் வந்திருந்தனர். நடிகை ஷாலினியும் திருமணத்திற்கு பின்னர் மாநில அளவில் பல பேட்மிண்டன் போட்டிகளில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
Twitter Post
வரவேற்பு நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்
இவர்களுடன், நடிகர் சிரஞ்சீவி, நாகார்ஜூனா, நடிகை மிருனாள் தாக்கூர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வேலை முன்னணியில், நாகார்ஜுனா அடுத்ததாக சேகர் கம்முலாவின் குபேராவில் தனுஷ் உடன் நடித்து வருகிறார். அதே வேளையில், லோகேஷ் கனகராஜின் ஆக்ஷன் த்ரில்லர் படமான கூலி ஆகியவற்றில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கிறார். நடிகர் அஜித்தும் அதேபோல தன்னுடைய விடாமுயற்சி படப்பிடிப்பை முடித்துவிட்டு, குட் பேட் அக்லீ படத்தில் பிஸியாக உள்ளார். அதே நேரத்தில் கார் பந்தயம், பைக் டூர் என தன்னுடைய தனிப்பட்ட பயணங்களில் ஈடுபட்டு வருகிறார். விடாமுயற்சி வரும் பொங்கல் 2025 -இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.