விஷால்-ஹரியின் 'ரத்னம்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
நடிகர் விஷால் மீண்டும் இயக்குனர் ஹரியுடன் இணைந்திருக்கும் திரைப்படம் தான் 'ரத்னம்'. விறுவிறுப்பாக நடைபெற்ற இதன் படப்பிடிப்பு, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் வைரலானது. இந்த நிலையில், படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி, இப்படம் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. 'ரத்னம்' திரைப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் முதல்முறையாக விஷாலுடன் ஜோடி சேர்கிறார் பிரியா பவானிஷங்கர். இந்த படத்தில் மேலும், சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
ஏப்ரல் 26ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது 'ரத்னம்'
Save the date for our biggie this summer 🔥#Rathnam hits the screens on the 26th of April 2024. In Tamil and Telugu. A film by #Hari. Coming to theatres, summer 2024. A @ThisisDSP musical. @stonebenchers @ZeeStudiosSouth @mynnasukumar @dhilipaction @PeterHeinOffl... pic.twitter.com/LZVCh2omLI— Vishal (@VishalKOfficial) January 25, 2024