
தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரமிற்கு காயம் - விலா எலும்பு முறிவு!
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரம் சினிமாவுக்காகவே தன் உடலை வருத்திக்கொண்டு நடிக்கும் நடிகர்களில் ஒருவர்.
இவர், மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார். இரண்டாவது பாகம் வெளியாகி விக்ரமிற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில், தங்கலான் படத்தின் ஒத்திகையின்போது விக்ரமிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் விக்ரமிற்கு விலா எலும்பு முறிந்துள்ளதால், படப்பிடிப்பில் பங்கேற்க மாட்டார் எனவும், சிறிது காலம் அவர் ஓய்வு எடுப்பார் என விக்ரமின் மேலாளர் சூரிய நாராயணன் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#JUSTIN || படப்பிடிப்பு ஒத்திகையின் போது ஏற்பட்ட விபத்தில் விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு
— Thanthi TV (@ThanthiTV) May 3, 2023
நடிகர் விக்ரம் விரைவில் பூரண நலம் பெறுவார்- மேலாளர் சூரியநாராயணன்#vikram | #actorvikram | #shooting | #Kollywood #thangalaan #chiyanvikram pic.twitter.com/tquDTwgBLo