Page Loader
26 ஆண்டுக்கு பின் வரப்போகும் சூர்ய வம்சம் இரண்டாவது பாகம்! 
சூர்யவம்சம் இரண்டாவது பாகம் எடுக்க திட்டம்

26 ஆண்டுக்கு பின் வரப்போகும் சூர்ய வம்சம் இரண்டாவது பாகம்! 

எழுதியவர் Siranjeevi
May 02, 2023
04:50 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவில் 1997 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில், சரத்குமார் நடிப்பில் வெளியான படம் தான் சூர்யவம்சம். இந்த படமானது 90களின் காலகட்டத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, பிளாக்பஸ்டர் பெற்றது. இன்றுவரை இந்த படத்தின் சின்ராசு மீம்ஸ்கள் இணையத்தில் உலா வருகின்றன. இந்த நிலையில், 26 வருடம் கழித்து இதன் இரண்டாவது பாகம் எடுக்க முயற்சிகள் நடைப்பெறுவதாக நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கதை உறுதியானால் படத்தை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன எனவும் கூறியுள்ளார். மேலும், சூரியன் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க யோசனை உள்ளதாகவும், மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது நிறைவாக இருந்தது எனவும் கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post