சென்னையில் குடும்பத்தோடு தி கோட் படத்தை கண்டுகளித்த நடிகர் விஜய்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜயின் தி கோட் திரைப்படம் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள தி கோட் அறிவியல் புனைவு கதையை அடிப்படையாக கொண்ட ஒரு குடும்ப ஆக்ஷன் படம் எனக் கூறப்படுகிறது. இந்த படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்துள்ளன. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் ஆசிரியர் தினத்தன்று வியாழக்கிழமை திரைக்கு வந்துள்ளது. இந்நிலையில் புதன்கிழமை இரவு விஜய் தனது குடும்பம், இசையமைப்பாளர் மற்றும் படக்குழுவினருடன் சென்னை அடையாறில் படத்தை கண்டுகளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.