'அன்பெனும் ஆயுதம்'- லியோ திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியானது
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படத்தின் 'அன்பெனும் ஆயுதம்' என்ற மூன்றாவது சிங்கிள் தற்போது வெளியாகி உள்ளது.
அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இத்திரைப்படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
லியோ திரைப்படத்தில் 'நான் ரெடி', 'படாஸ்' என இரு பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது 'அன்பெனும் ஆயுதம்' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக பட தயாரிப்பு நிறுவனம் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்து இருந்த நிலையில், படக்குழு ஒவ்வொரு பாடலாக வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
'அன்பெனும் ஆயுதம்' பாடல் வெளியானது
Notification: New addition to your playlist ❤️#LeoThirdSingle is out now!#Anbenum #TeraHiJaaduHai #PremaOhAyudham #PreethiyaAayudha #AnmbezhumAayudham single is here
— Seven Screen Studio (@7screenstudio) October 11, 2023
▶️ https://t.co/vkeq43jvve#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial… pic.twitter.com/TWfjxGlrjb