Page Loader
வாழை படத்திலிருந்து இன்னும் மீள முடியவில்லை; நடிகர் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி
வாழை திரைப்படத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு

வாழை படத்திலிருந்து இன்னும் மீள முடியவில்லை; நடிகர் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 25, 2024
03:38 pm

செய்தி முன்னோட்டம்

வாழை திரைப்படம் குறித்து ஒரு வீடியோவில் பேசியுள்ள நடிகர் விஜய் சேதுபதி, தன்னால் படத்தில் இருந்து இன்னும் மீண்டு வர முடியவில்லை எனக் கூறியுள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலரும் நடித்த வாழை திரைப்படம் வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 23) திரைக்கு வந்தது. டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் இணைந்து மாரி செல்வராஜ் மற்றும் திலீப் சுப்பராயன் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தமிழ் சினிமாவின் பல முன்னணி பிரபலங்களும் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர். அந்தவகையில், நடிகர் விஜய் சேதுபதி வாழை படம் மற்றும் மாரி செல்வராஜை பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதியின் பாராட்டுக்கு மாரி செல்வராஜ் நன்றி

விஜய் சேதுபதி பேசுகையில், "மாரி செல்வராஜ் இயக்கத்தில் வந்துள்ள வாழை என்ற அற்புதமான திரைப்படம் பார்த்தேன். என்னால் இன்னும் அந்த படத்தில் இருந்து மீண்டு வர முடியவில்லை. அந்த படத்தில் அவர் பேசிய அரசியல், வசனம், நடிகர்கள் மற்றும் அந்த ஊரில் இருக்கும் ஒருவனாக நான் அதில் மாட்டிக்கொண்டு வெளிவர முடியாமல் இருக்கிறேன். இது மாதிரியான செய்திகளை கேட்கும் போதும், செய்தித் தாள்களில் பார்க்கும் போதும் நாம் சாதாரணமாக கடந்து போய் இருப்போம். ஆனால், இதற்கு பின்னாள் இருக்கும் வாழ்க்கையை அழுத்தம் திருத்தமாக பதிய வைத்ததற்கு நன்றி. படத்தை தியேட்டரில் வந்து பாருங்கள்." எனக் கூறினார். விஜய் சேதுபதியின் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள மாரி செல்வராஜ், பாராட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

நடிகர் விஜய் சேதுபதி வீடியோ