அவ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு; GOAT படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது
தளபதி விஜயின் 68வது படமான GOAT படத்தின் மூன்றாவது பாடல் சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) வெளியிடப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் GOAT செப்டம்பர் 2024இல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக இளம் நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் விளம்பர வீடியோக்கள் மற்றும் ஏற்கனவே வெளியான பாடல்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்த நிலையில், தற்போது படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது. "அவ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு" என தொடங்கும் இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.