Page Loader
#தளபதி68: இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக பாங்காக் பறந்தார் விஜய்
#தளபதி 68: இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக பாங்காக் பறந்தார் விஜய்

#தளபதி68: இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக பாங்காக் பறந்தார் விஜய்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 03, 2023
09:15 am

செய்தி முன்னோட்டம்

வெங்கட் பிரபு முதல்முறையாக விஜய்யுடன் இணையும் திரைப்படம் 'தளபதி 68'. AGS நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது என வெங்கட் பிரபு தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இத்திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் இரு தினங்களுக்கு முன்னர் பாங்காக் சென்றனர். அவர்கள் விமான நிலையத்தில் இருப்பது போன்ற புகைப்படம் வைரலாக பரவிய நிலையில், இன்று அதிகாலை, நடிகர் விஜய்யும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள பாங்காக் சென்றுள்ளார். இது பற்றிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், படத்தின் பாடல் ஆசிரியர் மதன்கார்க்கி தன்னுடைய பேட்டி ஒன்றில், முதற்கட்ட படப்பிடிப்பில் விஜய் சம்மந்தப்பட்ட பாடல் ஒரு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்ற தகவலையும் வெளியிட்டார்.

ட்விட்டர் அஞ்சல்

தளபதி 68: படப்பிடிப்பிற்காக பாங்காக் பறந்தார் விஜய்