Page Loader
"விரைவில் பிரஷாந்திற்கு இரண்டாவது திருமணம்": மனம் திறந்த தியாகராஜன்
நடிகர் பிரஷாந்தும், அவரது தந்தை நடிகர் தியாகராஜனும்

"விரைவில் பிரஷாந்திற்கு இரண்டாவது திருமணம்": மனம் திறந்த தியாகராஜன்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 07, 2023
11:52 am

செய்தி முன்னோட்டம்

'டாப் ஸ்டார்' பிரஷாந்த், நேற்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில், அவரின் தந்தை தியாகராஜனின் பழைய பேட்டி ஒன்று மீண்டும் வைரல் ஆகி வருகிறது. பிரஷாந்த் தற்போது நடித்து வரும் 'அந்தகன்' படத்திற்கு, தியாகராஜன் தான் இயக்குனர். பலநாட்களாக எடுக்கப்பட்டு வரும் அந்த திரைப்படம், விரைவில் திரைக்கு வருமெனவும் பிரசாந்தின் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து வருகின்றனர். அதோடு, பிரஷாந்திற்கு எப்போது அடுத்த திருமணம் எனவும் கவலையில் உள்ளனர். அதுகுறித்து அந்த பேட்டியில் தியாகராஜனிடம் கேட்கப்பட்டது. மிகவும் மனம் வருந்திய அவர், பிரசாந்தின் திருமண வாழ்க்கை சரியாக போனதற்கு தானும் ஒரு காரணமோ என பலநாள் யோசித்ததுண்டு என அவர் கூறினார். "அது என்னோட தப்பு தான்", எனவும் தியாகராஜன் தெரிவித்தார்.

பிரஷாந்த்

பிரஷாந்துக்கு எப்போ கல்யாணம்?

அந்தகன் படம் வெளியான அடுத்த மாதமே, பிரஷாந்த் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தயாராக உள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார். நடிகர் பிரஷாந்த், கிரஹலக்ஷ்மி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணம் ஆன ௧ மாதங்களிலேயே, அவர் பிரசாந்தை பிரிந்தது விட்டார். அதன் பிறகு, வரதட்சணை கொடுமை என, பிரசாந்தின் மேல் புகாரளித்து, டைவோர்ஸ் கோரியிருந்தார். அதன் பின்னரே தெரிந்தது, கிரஹலக்ஷ்மி ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும், முதல் திருமணத்தை மறைத்து தான் பிரசாந்தை திருமணம் செய்துகொண்டார் என்றும். அதனால், இந்த திருமணம் செல்லாது என நீதிமன்றமே உத்தரவிட்டது என தியாகராஜன் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.