Page Loader
'டாப் ஸ்டார்' பிரசாந்தின் 50வது பிறந்தநாள் இன்று! அவரை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்!
பிரசாந்தின் 50வது பிறந்தநாள் இன்று!

'டாப் ஸ்டார்' பிரசாந்தின் 50வது பிறந்தநாள் இன்று! அவரை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள்!

எழுதியவர் Venkatalakshmi V
Apr 06, 2023
09:08 am

செய்தி முன்னோட்டம்

90களில், பல இளவட்டங்கள் நெஞ்சில், ட்ரீம் ஹீரோவாக வலம் வந்தவர் தான் நடிகர் பிரஷாந்த். விஜய்-அஜித் என்ற போட்டி தொடங்குவதற்கு முன்னரே, பிரசாந்தை தான் பல தயாரிப்பாளர்கள் அணுகினர். இயக்குனர்-நடிகர் தியாகராஜனின் மகனான பிரஷாந்த், நடனம், சண்டை, ஜிம்நாஸ்டிக்ஸ் என திரைப்படத்துறைக்கு தேவையான அனைத்து கலைகளும் கற்றுக்கொண்டு தான், நடிக்க வந்ததாக செய்திகள் உண்டு. இவரது தாய் வழி தாத்தாவும், தெலுங்கு, கன்னட உலகில் பிரபலமான இயக்குனர். மேலும், நடிகர் விக்ரம், இவரின் அத்தை மகனாவார். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அறிமுகம் ஆன காலகட்டத்திலேயே, அதை சார்ந்த பட்டப்படிப்பை முடித்தார். அதோடு, இசை சம்மந்தப்பட்ட படிப்பையும், லண்டனில் முடித்துள்ளார். இவரின் சிறு வயது கனவு, டாக்டர் ஆவது என பேட்டிகளில் கூறியதுண்டு.

பிரஷாந்த்

பாடகரான பிரஷாந்த்

இந்தியாவிலேயே, முதன்முறையாக, ஒரு நடிகருக்காக 'ஸ்டார் நைட்' என்ற நிகழ்ச்சியை, வெளிநாட்டில் கொண்டாடியது பிரஷாந்திற்காக மட்டுமே. திரை நட்சத்திரங்கள் ஒன்று கூடி விழாவில் கலந்து கொண்டனர். நடிகை ஐஸ்வர்யா ராய், ஜீன்ஸ் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டதே, பிரஷாந்திற்காக தான் எனவும் அப்போது செய்திகள் வெளிவந்தன. பிரஷாந்துடன் அதிக படங்களில் நடித்தவர் நடிகை சிம்ரன். இவர், பரத்வாஜ் இசையமைப்பில், 'பார்த்தேன் ரசித்தேன்' என்ற படத்தில் ஒரு பாடலும் பாடியுள்ளார். தற்போது, மீண்டும் சிம்ரனுடன் இனைந்து, 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்கியது அவரது தந்தை தியாகராஜன்.