கண்ணா ரெண்டு லட்டு தின்ன அசையா? இரண்டு படங்களில் இணைந்து நடிக்கும் சூர்யா- கார்த்தி
செய்தி முன்னோட்டம்
நடிகர் சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கும் அடுத்த வெளியீடு 'கங்குவா'. இப்படத்தில் நடிகர் கார்த்தி ஒரு சிறிய வேடத்தில் நடிக்கிறார் என்ற செய்திகள் வெளியானது.
அதை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் ஒரு பேட்டியில் உறுதி செய்தார். அதற்கேற்றாற்போல், படத்தின் டீசரில் ஒரு காட்சியில் கார்த்தி இருக்கிறார் என ரசிகர்கள் யூகிக்க துவங்கினர்.
இந்த நிலையில், 'கைதி 2' படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யாவும் நடிக்கவுள்ளார் என்ற செய்தி இணையத்தில் பரவி வருகிறது.
LCU
LCUவில் இணையும் சகோதரர்கள்?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, 'கைதி 2' படத்தில் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் டில்லி கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.
அதே போல 'விக்ரம்' திரைப்படத்தில் சூர்யா ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது 'கைதி 2' திரைப்படத்தில், அதே கதாபாத்திரத்தில் சூர்யா நடிப்பார் எனக்கூறப்படுகிறது.
சூர்யாவின் 'கங்குவா' படத்தில் கார்த்தி கேமியோ வேடத்தில் நடிக்கும் அதே நேரத்தில், 'கைதி 2' படத்தில் சூர்யா கேமியோ வேடத்தில் நடிக்கிறார்.
'கைதி 2' அடுத்தாண்டு வெளியாகும் என கார்த்தி தெரிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
"#Kanguva is coming on Nov-14 & #Kaithi2 is coming on 2025"#Suriya & #Karthi will feature together in both the movies🔥pic.twitter.com/rRzkO1j6Ne
— AmuthaBharathi (@CinemaWithAB) September 23, 2024