Page Loader
2,500 கிலோ அரிசியில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட சோனுசூட் உருவப்படம்! வைரல் 
2,500 கிலோ அரிசியில் உருவாக்கப்பட்ட நடிகர் சோனு சூட்டின் உருவப்படம்

2,500 கிலோ அரிசியில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட சோனுசூட் உருவப்படம்! வைரல் 

எழுதியவர் Siranjeevi
Apr 13, 2023
11:02 am

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவரான சோனு சூட், ஏழை மக்களுக்கு உதவுவதில் இரக்க குணம் கொண்டவர். கொரோனா காலக்கட்டத்தில் புலம் பெயர் தமிழர்களுக்காக இவர் செய்த உதவி மக்கள் மத்தியில் உண்மையான ஹீரோவாகவே காட்டியது. மேலும் உதவிக்கேட்டு வரும் ஏழை மக்களுக்கு, தொண்டு நிறுவனம் மூலம் பலவிதமான உதவிகளைச் செய்து வருகிறார். இதனிடையே, நடிகர் சோனுசூட்டை பெருமைப்படுத்தும் விதமாக மத்தியபிரதேச மாநிலத்தில், ரசிகர்கள் மற்றும் தொண்டு நிறுவனர்கள் சேர்ந்து ஒரு ஏக்கர் நிலத்தில் 2,500-கிலோ அரிசியில் பிரம்மாண்டமான உருவப்படத்தை உருவாக்கியுள்ளனர். இதனைக்கண்டு நெகிழ்ந்துபோன சோனு சூட் எல்லையற்ற அன்புக்கு நன்றியை தெரிவித்து, அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டது என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Embed

சோனு சூட் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த ட்வீட்

1 acre of land 2500 kgs of Rice for the needy. And tons & tons of Pure love ❤️ Humbled beyond words. @shubam81289781 pic.twitter.com/C6YRBnrAFV— sonu sood (@SonuSood) April 12, 2023