அடுத்த செய்திக் கட்டுரை
    
     
                                                                                மகனின் பிறந்தநாளுக்காக கியூட்டான புகைப்படத்தை பகிர்ந்தார் சிவகார்த்திகேயன்
                எழுதியவர்
                Venkatalakshmi V
            
            
                            
                                    Jul 12, 2023 
                    
                     01:14 pm
                            
                    செய்தி முன்னோட்டம்
நடிகர் சிவகார்த்திகேயன், சின்னத்திரையிலிருந்து வந்து, வெள்ளித்திரையில் சாதித்து கொண்டிருப்பவர். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து, சினிமாத்துறையில் வெற்றி கண்ட இவரின் பயணம், பலருக்கும் ஒரு முன்னுதாரணம். அவருடைய நண்பர்கள் மற்றும் அவருடன் பணிபுரிந்த பலரும் கூறுவது, அவர் ஒரு பேமிலி-மேன் என்பது. சிவகார்த்திகேயன், மறைந்த அவரின் தந்தையின் நினைவாக தனது மகனுக்கு 'குகன் தாஸ்' என பெயரிட்டுள்ளார். அவருக்கு இன்று பிறந்தநாள். அதற்காக தன்னுடைய குடும்ப புகைப்படம் ஒன்றை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அந்த பதிவிற்கு லைக்ஸ் குவிந்தவண்ணம் உள்ளது. இதனிடையே, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'மாவீரன்' திரைப்படம் இன்னும் இரு தினங்களில், ஜூலை 14 அன்று வெளியாகவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.