Page Loader
படப்பிடிப்பு தளத்தில் விபத்து! நடிகர் சஞ்சய் தத் பலத்த காயம்
நடிகர் சஞ்சய் தத்திற்கு படப்பிடிப்பில் காயம் ஏற்பட்டுள்ளது

படப்பிடிப்பு தளத்தில் விபத்து! நடிகர் சஞ்சய் தத் பலத்த காயம்

எழுதியவர் Siranjeevi
Apr 12, 2023
07:10 pm

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் முன்னணி நடிகர் சஞ்சய் தத் படப்பிடிப்பில் குண்டு வெடித்த விபத்தில் பலத்த காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கன்னட சினிமாவில் நடிகர் துருவா சர்ஜா நடித்து வரும் கேடி திரைப்படத்தில் வில்லனாக நடிகர் சஞ்சய் தத் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோவுக்கும், வில்லனுக்கும் ஏற்பட்ட வெறித்தனமான சண்டை காட்சியில் டம்மி வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்போது, குண்டுகள் வெடிக்கும் போது எதிர்பாராத விதமாக சஞ்சய் தத்திற்கு கை, முகம் மற்று முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வரும் சஞ்சய் ரசிகர்கள் கவலைப்பட தேவையில்லை கன்னட சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Instagram அஞ்சல்

Instagram Post