Page Loader
குற்றம் நடந்த இரவு என்ன நடந்தது? நடிகர் சைஃப் அலி கான் வாக்குமூலம்
சைஃப் அலி கான் கத்தியால் தாக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

குற்றம் நடந்த இரவு என்ன நடந்தது? நடிகர் சைஃப் அலி கான் வாக்குமூலம்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 24, 2025
03:11 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த 16-ஆம் தேதி நடிகர் சைஃப் அலி கான் வீட்டில் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர், அவரை கத்தியால் தாக்கிய விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், 2 தினங்களுக்கு முன்னர் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர் அன்றிரவு என்ன நடந்தது என்பது குறித்து காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. மர்ம நபர் தன்னை கத்தியால் தாக்கியது குறித்தும், மர்ம நபர் உள்ளே நுழைந்த போது தான் எங்கிருந்தார் என்பது குறித்தும், எதற்காக லீலாவதி மருத்துவமனைக்கு சென்றார் என்பது குறித்தும் அந்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் நடிகர் சைஃப்.

விவரங்கள்

சைஃப் அலி கான் வாக்குமூலத்தின் விவரங்கள் 

சைஃப் அலி கான் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், "இந்தச் சம்பவம் நடந்தபோது நானும், என் மனைவி கரீனாவும் படுக்கையறையில் இருந்தோம். அப்போது எனது மகன் ஜஹாங்கிரை பார்த்துக்கொள்ளும் உதவியாளர் எலியாமா பிலிப்பின் அலறல் சத்தம் கேட்டது". "அவர் எனது மகனின் அறையில் தான் உறங்குவது வழக்கம். எலியாமா பிலிப்பின் சத்தம் கேட்டவுடன் என்னவென்று பார்க்க சென்றேன். அங்கே மர்ம நபர் இருந்ததையும், மகன் ஜஹாங்கீர் அழுது கொண்டிருந்ததையும் பார்த்தேன். அந்த மர்ம நபரை பிடிக்க முயன்ற கலவரத்தில், எலியாமா ஜஹாங்கிரை தூக்கி கொண்டு வெளியே ஓடிவிட்டார்" என்றார்.

மருத்துவமனை

மருத்துவமனைக்கு விரைந்த நடிகர்

"நானும் அந்த மர்ம நபரை எப்படியோ அறையில் அடைத்து வைத்தேன். இந்த களேபரத்தில் அந்த நபர் முதுகு, கழுத்து மற்றும் கைகளில் பலமுறை குத்தினான். எனினும் பூட்டிய அறையிலிருந்து அவன் எப்படியோ தப்பித்துவிட்டான்" என்றார். "இந்த மோதலில் உதவியாளர் எலியாமாவுக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, நானும் உடனடியாக லீலாவதி மருத்துவமனைக்கு சென்றேன். இந்த மருத்துவமனை எங்கள் வீட்டிலிருந்து 10 நிமிட இடைவேளையில் தான் உள்ளது" என்றார். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர் வங்கதேசத்தை சேர்ந்த முகமது ஷரிபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் என்பது தெரியவந்துள்ளது. இவர் தானேயில் கைது செய்யப்பட்டார்.