LOADING...
நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி: நலமுடன் திரும்ப ரசிகர்கள் பிரார்த்தனை
நடிகர் ரோபோ சங்கர் ICU-வில் அனுமதி

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி: நலமுடன் திரும்ப ரசிகர்கள் பிரார்த்தனை

எழுதியவர் Venkatalakshmi V
Sep 18, 2025
06:38 am

செய்தி முன்னோட்டம்

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படப்பிடிப்பின்போது அவருக்கு திடீரென நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் அவர் மயங்கி விழுந்துள்ளார். முதலில் சாதாரணப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்புக்காக ICU-க்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அறிக்கை எதுவும் வெளியிடாத நிலையில் அவர் விரைந்து குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.

விவரங்கள்

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வரை உயர்ந்த ரோபோ ஷங்கர்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி கலைஞராக அறிமுகமாகி, பின்னர் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகப் புகழ்பெற்றவர் ரோபோ சங்கர். விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் மஞ்சள் காமாலை நோயிலிருந்து மீண்டு வந்த நிலையில், மீண்டும் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவரது திடீர் உடல் எடை குறைப்பும் ரசிகர்களை அப்போது கவலையில் ஆழ்த்தியது. ரோபோ ஷங்கருக்கு இந்திரஜா என்ற பெண் உள்ளார். அவர் 'பிகில்' படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். அதேபோல ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்காவும் நடிகையாவார்.