Page Loader
கனவு பலித்ததே! குட் பேட் அக்லீ படத்தில் அஜித்துடன் இணைகிறார் நடிகர் பிரசன்னா
குட் பேட் அக்லீ படத்தில் அஜித்துடன் இணைகிறார் நடிகர் பிரசன்னா

கனவு பலித்ததே! குட் பேட் அக்லீ படத்தில் அஜித்துடன் இணைகிறார் நடிகர் பிரசன்னா

எழுதியவர் Venkatalakshmi V
Oct 03, 2024
01:36 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் அஜித்துடன் முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ளார் நடிகர் பிரசன்னா. 'குட் பேட் அக்லீ' படத்தில் அவர் நடிக்கிறார். இது குறித்து அவரே எக்ஸ் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார். தனது கனவு நனவானதாக அவர் தெரிவித்துள்ளார். 'மங்காத்தா', 'வலிமை' திரைப்படங்களில் கை நழுவி போன வாய்ப்பு தற்போது மீண்டும் தனக்கு கிடைத்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். "கடவுள், AK சார், ஆதிக், சுரேஷ் சந்திரா சார், மைத்ரி மூவிஸ், கடைசியாக தலவுடன் என்னைப் பார்க்க விரும்பிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார். எனினும் தனது கதாபாத்திரம் குறித்து முழுமையாக தகவல்கள் பகிர முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கம் குட் பேட் அக்லீயில் திரிஷா நாயகியாக நடிக்கிறார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post