நடிகர் சங்க கட்டிட பணிக்கு ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கினார் நடிகர் நெப்போலியன்
செய்தி முன்னோட்டம்
தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக, பிரபல நடிகரும், முன்னாள் MP-யுமான நெப்போலியன் ரூ.1 கோடி வழங்கியுள்ளார். இது குறித்து நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
பல ஆண்டுகளாக நடிகர் சங்கத்திற்கான புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக போதிய நிதி உள்ளதாக காரணத்தால், கட்டட பணிகள் இடை நிறுத்தப்பட்டன. இந்த கட்டடத்தின் பணிக்காக ரஜினிகாந்த், கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின், சிவகார்த்திகேயன், உட்பட பல நட்சத்திரங்கள் சமீபத்தில் நிதி உதவி செய்தனர்.
அதனால் கட்டட பணிகள் மீண்டும் துவங்கி விட்டது. தற்போது பிரபல நடிகர் நெப்போலியன் இந்த கட்டிட பணியை விரைந்து முடிக்க ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.
நெப்போலியன் முன்னதாக சங்கத்தின் உபதலைவராக பொறுப்பேற்றிருந்தார்.
embed
நன்கொடை வழங்கினார் நடிகர் நெப்போலியன்
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளுக்காக ரூ.1 கோடி வைப்பு நிதியாக வழங்கினார் நடிகர் நெப்போலியன் https://t.co/wupaoCz9iu | #Napolean #SouthIndianArtistesAssociation #TamilNews pic.twitter.com/rujw2BDQYw— ABP Nadu (@abpnadu) April 29, 2024