
நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் இன்று நிச்சயதார்த்தமா?
செய்தி முன்னோட்டம்
தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் இன்று ஆகஸ்ட் 8ஆம் தேதி ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது இல்லத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளதெனவும், விழா முடிந்ததும் நாகசைதன்யாவின் தந்தையும், நடிகருமான நாகார்ஜூனா, இதனை அதிகாரபூர்வமாக அறிவிக்கக்கூடும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், நிச்சயதார்த்தம் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இதுவரை இல்லை.
சமந்தாவிடம் இருந்து நாக சைதன்யா விவாகரத்து பெற்ற பிறகு, சோபிதா துலிபாலாவுடனான அவரது உறவு குறித்த வதந்திகளின் வலையில் அவர் சிக்கினார்.
இதுவரை, நாக சைதன்யாவோ அல்லது சோபிதா துலிபாலாவோ தங்கள் உறவை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளவில்லை.
இருப்பினும், அவர்கள் ஒன்றாக விடுமுறைகளுக்கு சென்றுள்ளனர் என்பது புகைப்படங்களிலிருந்து யூகிக்க முடிந்தது.
ட்விட்டர் அஞ்சல்
நாக சைதன்யாவுக்கு இன்று நிச்சயதார்த்தமா?
Buzz:
— Gulte (@GulteOfficial) August 7, 2024
According to unconfirmed industry reports, #NagaChaitanya and #SobhitaDhulipala are set to be engaged today in a private ceremony.#Nagarjuna might be announcing the union via social media with pictures of the couple from engagement. pic.twitter.com/cOYhNMxIgD