சரக்கு சாப்பிட்டால் சை டிஷ் சாப்பிடுங்க! மனோபாலா இறுதி ஊர்வலத்தில் சலசலப்பை ஏற்படுத்திய மன்சூர் அலிகான்
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகம் கொண்ட மனோபாலா கல்லீரல் பிரச்சினை காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவு சினிமா ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. பல திரைப்பிரபலங்கள் வந்து நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், மனோபாலாவின் இறுதி ஊர்வலத்தில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், மனோபாலா ஒரு அற்புதமான மனிதர், அவரை போல் யாரும் வத்த குழம்பு வைக்க முடியாது எனக்கூறினார்.
மேலும், மதுபானம் திரையுலகில் பலருக்கும் எமனாக வந்துள்ளது. சரக்கு சாப்பிட்டால் சை டிஷ் சாப்பிடுங்கள் என அவர் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் பலரும் துக்க நிகழ்வில் வந்து அவர் இப்படியா பேசுவது என விமர்சித்து வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Watch | "எந்த பிரச்னையாய் இருந்தாலும் இவரைதான் தூதுவராய் அனுப்புவார்கள்"
— Sun News (@sunnewstamil) May 4, 2023
மறைந்த நடிகர் மனோபாலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி#SunNews | #Manobala | #RIPManobala pic.twitter.com/Ritgw9wE2V