Page Loader
ஹங்கேரி நாட்டில் நடைபெற்ற நடிகர் கார்த்திக்கின் இரண்டாவது மகன் கியான் கார்த்திக் திருமணம்
மஞ்சிமா மோகன் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோவில் ஒரு காட்சி

ஹங்கேரி நாட்டில் நடைபெற்ற நடிகர் கார்த்திக்கின் இரண்டாவது மகன் கியான் கார்த்திக் திருமணம்

எழுதியவர் Srinath r
Sep 27, 2023
01:52 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான நடிகர் கார்த்திக்கின் இளைய மகனும், நடிகர் கௌதம் கார்த்திக்கின் தம்பியுமான கியான் கார்த்திக்கின் திருமணம் ஹங்கேரி நாட்டில் நடைபெற்றுள்ளது. கியான் கார்த்திக் தனது நீண்ட கால தோழியான சாரா என்பவரை நேற்று கரம் பிடித்துள்ளார். இத்திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் நடிகர் கௌதம் கார்த்திக்கின் மனைவியான மஞ்சிமா மோகன், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில் இவர்களது திருமணம் பெற்றதற்கான புகைப்படங்களும், கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களும் இடம் பெற்றுள்ளது. கியான் கார்த்திக்- சாரா திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் நடிகரும் கியானின் தந்தையுமான நடிகர் கார்த்திக் இத்திருமணத்தில் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Instagram அஞ்சல்

மஞ்சிமா மோகனின் ஹங்கேரி பயணம் குறித்த இன்ஸ்டாகிராம் பதிவு