Page Loader
தளபதி 68: பகவதி திரைப்படத்திற்கு பிறகு, விஜய் உடன் மீண்டும் இணையும் ஜெய்
விஜய் உடன் மீண்டும் இணையும் ஜெய்

தளபதி 68: பகவதி திரைப்படத்திற்கு பிறகு, விஜய் உடன் மீண்டும் இணையும் ஜெய்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 10, 2023
02:07 pm

செய்தி முன்னோட்டம்

2002ஆம் ஆண்டில், நடிகர் விஜய், ரீமா சென் நடிப்பில் வெளியான திரைப்படம், 'பகவதி'. அந்த படத்தின் மூலமாகத்தான், நடிகர் ஜெய் தனது திரைப்பயணத்தை துவங்கினார். விஜய்யின் தம்பியாக நடித்திருப்பார் ஜெய். அதன் பின்னர், பல படங்களில் அவர் நடித்திருந்தாலும், விஜயுடன் மீண்டும் இணையவே இல்லை. இதுகுறித்து, சமீபத்தில் ஒரு தனியார் ஊடகத்தின் பேட்டியில், தான் மீண்டும் விஜய்யுடன் இணைய விரும்புவதாகவும், ஆனால், அவரிடம் இருந்து எந்த பதிலும் இதுவரையில் வரவில்லை எனவும், 'பகவதி' படத்தில் தன்னுடைய மோசமான நடிப்பை பார்த்துதான், விஜய் இந்த முடிவை எடுத்திருப்பார் எனவும் வேடிக்கையாக கூறினார் ஜெய். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிக்கப்போகும், 'தளபதி 68' திரைப்படத்தில், ஜெய்க்கு முக்கியமான வேடம் தந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ட்விட்டர் அஞ்சல்

விஜய் - ஜெய் இணையப்போவதாக தகவல்