கைகளில் ருத்திராட்சை மாலையுடன், அண்ணாமலையார் கோவிலை வலம் வந்த நடிகர் தனுஷ்
நடிகர் தனுஷ் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதோடு அவர் இயக்கத்தில் வெளியான 'ராயன்' திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தீவிர சிவ பக்தரான தனுஷ், இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு அவர் திருவண்ணாமலைக்கு வருகை தந்தார். உடன் அவரது மகன்களான யாத்ரா மாற்றும் லிங்கா ஆகியோரும் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். கைகளில் ருத்ராட்சை மாலையை ஏந்தியபடி, ஓம் நம சிவாய என முணுமுணுத்தபடி, தனுஷ் சிவனை பிரதித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் திருவண்ணாமலைக்கு வந்திருக்கும் செய்தி அறிந்ததும் ரசிகர்கள் அவரை காண கோவிலில் திரண்டதால் கோவிலருகே பரபரப்பு ஏற்பட்டது. மேலும், கோவிலுக்கு உள்ளேயும் அவருடன் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.