
தனுஷின் இட்லி கடை படத்தில் அசோக் செல்வன் நடிக்கிறாரா? அவரே கூறிய பதில் இதோ
செய்தி முன்னோட்டம்
நடிகர் தனுஷ், அவரது 52வது படத்தினையும் அவரே இயக்குவார் என கடந்த வாரம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் பெயர் 'இட்லி கடை' எனவும் தெரிவிக்கப்பட்டது.
இப்படத்தினை ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் என்கிற நிறுவனம் தயாரிக்கிறது.
இது அவர்களுடைய முதல் தயாரிப்பாகும்.
முன்னதாக, பா பாண்டி (2017), ராயன் (2024), மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்(NEEK) ஆகிய படங்களுக்குப் பிறகு தனுஷ் இயக்கும் நான்காவது படம் இதுவாகும்.
இப்படத்தில் நடிகர் அருண் விஜய் வில்லனாகவும், அசோக் செல்வன் தனுஷின் தம்பியாகவும் நடிப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், தான் இப்படத்தில் நடிக்கவில்லை என அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
I love @dhanushkraja sir and an ardent fan and look forward to be working with him in the future but, would like to clarify that I am not part of #IdlyKadai 🙏🏽 https://t.co/t02M8X4YUS
— Ashok Selvan (@AshokSelvan) September 24, 2024
எதிர்கால படங்கள்
தனுஷின் அடுத்தடுத்த பட வரிசைகள்
தனுஷ் சமீபத்தில் தனது இரண்டாவது இயக்கமான ராயன் மூலம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை அனுபவித்தார்.
அடுத்ததாக அவர் சேகர் கம்முலாவின் குபேரா படத்தில், ராஷ்மிகா மந்தனாவுக்கு ஜோடியாக அவர் நடிக்கிறார்.
இப்படத்தில் நாகர்ஜூனாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இளையராஜா வாழ்க்கை வரலாற்று படமான மேஸ்ட்ரோ படத்தில் நடிக்கவுள்ளார்.
தற்சமயம் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தையும் தனுஷ் இயக்கி வருகிறார்.
இது அவருடைய மூன்றாவது இயக்கமாகும்.