LOADING...
பாலிவுட் நடிகர் உடன் இணையும் லோகேஷ் கனகராஜ்; விவரங்கள் உள்ளே!
இந்த ஆண்டு அக்டோபரில், லோகேஷின் படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

பாலிவுட் நடிகர் உடன் இணையும் லோகேஷ் கனகராஜ்; விவரங்கள் உள்ளே!

எழுதியவர் Venkatalakshmi V
Jun 05, 2025
04:08 pm

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமிர் கானும், தமிழ் சினிமாவின் பிரபல இளம் இயக்குனருமான லோகேஷ் கனகராஜும் முதல் முறையாக இணைகிறார்கள். இதனை சமீபத்தில் அமீர்கான் உறுதி செய்துள்ளார். கடந்த ஆண்டு முதல் இந்த திட்டம் செய்திகளில் இடம்பெற்று வருகிறது. செய்திகளின் படி, இது லோகேஷ், சூர்யாவை வைத்து எடுக்க நினைத்த 'இரும்பு கை மாயாவி' திரைப்படமாக இருக்கக்கூடும் எனவும் கூறப்படுகிறது. காரணம், அமீர் கான், தான் லோகேஷ் உடன் இணையும் படம் ஒரு சூப்பர்-ஹீரோ படம் என தெரிவித்துள்ளார். 'இரும்பு கை மாயாவி' என்பது ஒரு சூப்பர் ஹீரோ படம், இதில் கதாநாயகன் தனது கையை இழந்து, ஒரு உலோக கை பொருத்தப்பட்டு, அதைக்கொண்டு தீய சக்திகளுடன் போராடுவதைச் சுற்றி வருகிறது.

உரையாடல்

அமீர்கானின் உரையாடல்

லோகேஷ் கனகராஜுடன் ஒரு படம் பற்றி கேட்டபோது, ​​பத்திரிகையாளர்களுடனான குழு உரையாடலின் போது அவர்,"லோகேஷ் மற்றும் நான் ஒரு படத்தில் வேலை செய்கிறோம். இது சூப்பர் ஹீரோ வகையைச் சேர்ந்தது. இது ஒரு பெரிய அளவிலான அதிரடி படம் மற்றும் 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் திரைக்கு வரும்" பதிலளித்தார். இந்த ஆண்டு அக்டோபரில், லோகேஷின் படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் லோகேஷ் கனகராஜின் இயக்கும் "கூலி" படத்திலும் ஆமிர் கான் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். இது வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகும்.