LOADING...
பெல்ஜியம் ரேஸில் அஜித் குமாரின் ரேஸிங் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது
பெல்ஜியம் ரேஸில் அஜித் குமாரின் ரேஸிங் அணி வெள்ளிப் பதக்கம்

பெல்ஜியம் ரேஸில் அஜித் குமாரின் ரேஸிங் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது

எழுதியவர் Venkatalakshmi V
Apr 21, 2025
09:34 am

செய்தி முன்னோட்டம்

நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமார் தலைமையிலான 'அஜித் குமார் ரேஸிங்' அணி, பெல்ஜியத்தில் நடைபெற்ற GT4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த வெற்றி தொடர்பான தகவல், அஜித் குமார் ரேஸிங் அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த செய்தி அஜித்தின் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக அஜித்தின் கார் ரேஸ் அணி, துபாயில் நடைபெற்ற 24 மணி நேர ரேஸ் போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்தது. அதை தொடர்ந்து இத்தாலியில் நடைபெற்ற ரேஸிலும், மூன்றாவது இடமும், பெல்ஜியத்தில் நடந்த போட்டியில் இரண்டாவது இடத்தையும் பிடித்தது குறிப்பிடத்தக்கது

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

பயணம்

சினிமா வெளியீட்டிற்கு இடையே ரேஸிங்கை தொடரும் அஜித்

கார் ரேஸ் போட்டியில் அணிக்கு கிடைத்த இந்த வெற்றிகள், அஜித் குமார் ரேஸிங் அணியின் போட்டித்திறனை மற்றும் உலகளாவிய மேடையில் இந்தியா எடுத்துள்ள முன்னேற்றத்தை வெளிக்கொணர்கின்றன. இந்த ஆண்டு தொடக்கம் முதல் அக்டோபர் வரை கார் ரேஸிங்கில் ஈடுபடத் திட்டமிட்டுள்ள அஜித், இதற்காக சினிமாவில் இருந்து சிறிய இடைவெளி எடுத்துள்ளார். பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக கடுமையான டயட் மற்றும் பயிற்சியின் மூலம் தனது உடல் எடையைக் குறைத்து, புதிய அவதாரத்தில் களமிறங்கியுள்ளார். இந்த ஆண்டு தொடர்ந்து 2 படங்கள் அவர் நடிப்பில் வெளியாகியுள்ளது. அதில் விமர்சனரீதியாக பாராட்டப்பட்டாலும், எதிர்பார்த்த வசூலை பெறமுடியாமல் திண்டாடிய விடாமுயற்சி திரைப்படமும், வசூலை வாரிக்குவித்து வரும் குட் பேட் அக்லி திரைப்படமும் அடங்கும்.