Page Loader
ஆதிபுருஷ் படத்தின் வசனகர்த்தா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரல் 
ஆதிபுருஷ் படத்தின் வசனகர்த்தா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரல்

ஆதிபுருஷ் படத்தின் வசனகர்த்தா நிபந்தனையற்ற மன்னிப்பு கோரல் 

எழுதியவர் Nivetha P
Jul 08, 2023
02:43 pm

செய்தி முன்னோட்டம்

ராமாயணத்தினை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வெளியாகியுள்ள திரைப்படம் தான் 'ஆதிபுருஷ்'. மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தினை ஓம் ராவத் இயக்கியுள்ளார். இதில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ், ராவணன் கதாபாத்திரத்தில் சைப் அலிகான், சீதை கதாபாத்திரத்தில் சனோன் ஆகியோர் நடித்துள்ளார்கள். 3டி தொழில்நுட்பத்துடன் எடுக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடன், மலையாளம் என 5 மொழிகளில் கடந்த ஜூன் 16ம் தேதி வெளியானது. இந்நிலையில், இப்படத்தினை பார்த்தோர் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்த நிலையில், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சில வசனங்கள் ராமாயணத்தினை இழிவுப்படுத்துவது போல் உள்ளது என்று பலர் எதிர்ப்பு தெரிவிக்க துவங்கினார்.

மன்னிப்பு 

வசனங்கள் குறித்த சர்ச்சைகள் அதிகமானதன் காரணமாக ட்விட்டரில் பதிவு 

இது குறித்து கடுமையான விமர்சனங்கள் செய்யப்பட்டதையடுத்து, படத்தின் வசனகர்த்தாவான மனோஜ் முண்டாஷீர் சுக்லாவிற்கு மிரட்டல்கள் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்றும் தெரிகிறது. எனினும், இப்படத்தின் வசனங்கள் குறித்த சர்ச்சைகள் அதிகமான நிலையில், மனோஜ் முண்டாஷீர் சுக்லா தனது ட்விட்டர் பக்கத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பினை கோரியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, "ஆதிபுருஷ் படத்தின் மூலம் மக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளது என்பதனை நான் ஏற்கிறேன். அதற்காக கைகூப்பி என்னுடைய நிபந்தனையற்ற மன்னிப்பினை கோருகிறேன். பிரபு பஜ்ரங்கபலி நம் அனைவரையும் ஒன்றிணைத்து நமது உயர்ந்த தேசத்துக்கும், நமது புனித சனாதனத்துக்கும், நாம் சேவை செய்வதற்கான வலிமையினை வழங்கட்டும்" என்று பதிவு செய்துள்ளார்.