LOADING...
அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் இணையும் #AA23 படத்தின் புதிய சாதனை; வைரலாகும் புதிய செல்பி
#AA23 லோகேஷ் கனகராஜின் 7-வது திரைப்படமாகும்

அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் இணையும் #AA23 படத்தின் புதிய சாதனை; வைரலாகும் புதிய செல்பி

எழுதியவர் Venkatalakshmi V
Feb 18, 2026
01:48 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் அல்லு அர்ஜுன் இடையிலான புதிய திரைப்படம், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே சமூக வலைதளங்களில் புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் வெளியான இப்படத்தின் அறிவிப்பு வீடியோ, அனிருத்தின் அதிரடியான இசைக்காக பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள '#AA23 தீம்' இசை, இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் தளங்களில் 10 லட்சம் ரீல்ஸ்களை கடந்து மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஒரு இந்திய திரைப்படத்தின் 'அறிவிப்பு தீம்' இவ்வளவு பெரிய ரீல்ஸ் எண்ணிக்கையை பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்த சாதனையை முன்னிட்டு, லோகேஷ், அல்லு அர்ஜுனுடன் இருக்கும் ஒரு செல்பி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

விவரங்கள்

திரைப்படம் குறித்த கூடுதல் விவரங்கள்

இது நடிகர் அல்லு அர்ஜுனின் 23-வது திரைப்படமாகவும், லோகேஷ் கனகராஜின் 7-வது திரைப்படமாகவும் அமைகிறது. பிரம்மாண்டமான 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே தெரிவித்ததை போல அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். லோகேஷ் -அனிருத் கூட்டணியின் முந்தைய ஹிட் பாடல்களை போலவே இதுவும் ஒரு 'சம்பவமாக' இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லு அர்ஜுன் தற்போது அட்லீயுடன் ஒரு படத்தில் பணியாற்றி வருகிறார். அந்த பணிகளுக்கு பிறகு, இப்படத்தின் படப்பிடிப்பு 2026-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement