சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்!
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் பிரபலமான துறைகளில் கிரிக்கெட் மற்றும் சினிமாவும் உண்டு.
இந்த இரண்டு துறைகளிலும் கோலோச்சும் இரு நட்சத்திரங்கள், சமீபத்தில் சந்தித்து கொண்டனர்.
புகழ்பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் இருவரும் இணைந்து இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை கிரிக்கெட் வீரர் கபில்தேவ் பகிர்ந்துகொண்டார்.
அதோடு, "இந்த தருணத்தை இத்தகைய குறிப்பிடத்தக்க நபருடன் பகிர்ந்து கொள்வது உண்மையிலேயே ஒரு பாக்கியம்" என்றும் தெரிவித்துள்ளார்.
கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும், 'லால் சலாம்' படப்பிடிப்பிற்காக மும்பை சென்றுள்ளார்.
அங்கு தான், கபில் தேவை சந்தித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
Rajnikanth and kapil dev
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ்
தற்பொழுது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் ரஜினி காந்திற்கு, கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் தனது ஆழ்ந்த அபிமானத்தை வெளிப்படுத்தினார்.
இந்த படம் வருகிற ஆகஸ்ட் 10, 2023 அன்று வெளியாக உள்ளது.
ரஜினிகாந்த்தை சந்தித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் நடிகர் ரஜினிகாந்த் தனது மகளின் வரவிருக்கும் திரைப்படமான லால் சலாம் படத்திலும் மொய்தீன் பாயாக தோன்ற உள்ளார்.
மேலும், லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் தனது அடுத்த படத்திற்காக இயக்குனர் டி.ஜே.ஞானவேலுடன் இணைவதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.