NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / விஜயகாந்த் உருவாக்கிய முக்கிய இயக்குனர்கள் ஒரு தொகுப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    விஜயகாந்த் உருவாக்கிய முக்கிய இயக்குனர்கள் ஒரு தொகுப்பு

    விஜயகாந்த் உருவாக்கிய முக்கிய இயக்குனர்கள் ஒரு தொகுப்பு

    எழுதியவர் Srinath r
    Dec 28, 2023
    03:36 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்து சில வருடங்களாகவே, உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த், மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை நிமோனியாவால் உயிரிழந்தார்.

    கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், இவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    நாளை மாலை அந்த அலுவலகத்திலேயே, அவரின் பூத உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

    தமிழ் சினிமாவின் கருணை வள்ளல், பிலிம் இன்ஸ்டியூட் மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் ஹீரோ, தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தாத நடிகர் என அனைவராலும் கொண்டாடப்படும் விஜயகாந்த், திரையுலகில் எதிரியே இல்லாத ஒரே நடிகர்.

    இதுவரை 56 புதுமுக இயக்குனர்களுக்கு விஜயகாந்த் வாய்ப்பு அளித்துள்ள நிலையில், அதில் முக்கியமானவர்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    2nd card

    ஊமை விழிகள் - அரவிந்தராஜ்

    தற்போது வரை 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயகாந்த், அதில் 56 புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தியுள்ளார் என்றால், சற்று ஆச்சரியமாக தான் இருக்கும்.

    பிலிம் இன்ஸ்டியூட் மாணவரான அரவிந்த்ராஜ் இயக்கிய, ஊமை விழிகள் திரைப்படத்தில் பலரும் நடிக்க மறுத்த, வயதான டிஎஸ்பி தீனதயாளன் கேரக்டரில், தனது இமேஜையும் பொருட்படுத்தாமல் விஜயகாந்த் நடித்தார்.

    படம் மாபெரும் வெற்றியடைந்து, கேம்பஸ் இன்டர்வியூ மூலம் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு வேலை வழங்கும் ஐடி நிறுவனங்கள் போல, பிலிம் இன்ஸ்டியூட் மாணவர்களுக்கு ராவுத்தர் சினிமாஸ் மாறிப்போனது.

    அதன் பின்னர் அரவிந்தராஜ் இயக்கிய, உழவன் மகன், தாய் நாடு ஆகிய திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றது.

    3rd card

    புலன் விசாரணை- ஆர்கே செல்வமணி

    விஜயகாந்த் இயக்குனராக உருவாக்கிய மற்றொரு பிலிம் இன்ஸ்டியூட் மாணவர் ஆர்கே செல்வமணி.

    படத்தின் மீது முதலில் நம்பிக்கை கொண்ட விஜயகாந்த், படத்தை குறிப்பிட்ட காலத்தில் செல்வமணி முடிக்காததால், அவர் மீது கோபம் கொண்டதாக கூறப்பட்டது.

    இருப்பினும் அதை பொருட்படுத்தாத செல்வமணி படத்தில் கவனம் செலுத்தினார். படம் வெளியாகி பட்டி, தொட்டி எங்கும் மாபெரும் வெற்றி பெற்று, விஜயகாந்தை மாடனாக ஹீரோவாக படம் மாற்றியது.

    இப்படத்தின் வெற்றிக்கு பின்னர், விஜயகாந்த் நண்பரான ராவுத்தர் மிகப்பெரிய மாலையுடன் ஆர்கே செல்வமணியை சந்தித்து, விஜயகாந்தின் நூறாவது படத்தை இயக்கும் வாய்ப்பையும் அவருக்கே வழங்கினார்.

    அவரின் நூறாவது படமான கேப்டன் பிரபாகரனும் மாபெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்தே அவர் இன்று வரை 'கேப்டன்' என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார்.

    3rd card

    தெற்கத்திக் கள்ளன் - கலைமணி

    இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் 16 வயதினிலே திரைப்படம் முதல் சினிமாவில் எழுத்தாளராக இருந்திருந்தாலும், 1988 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான தெற்கத்திக் கள்ளன் திரைப்படத்தின் மூலமே, கலைமணி இயக்குனராக அறிமுகமானார்.

    இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் பொறுத்தது போதும், மனித ஜாதி ஆகிய இரண்டு வெற்றி படங்களை அவர் இயக்கினார்.

    மூன்று தசாப்தங்கள் நீடித்த கலைமணியின் சினிமா வாழ்க்கையில், அவர் இயக்குனராக வழங்கிய வெற்றிகளுக்காகவே அறியப்படுகிறார்.

    4th card

     பரதன்- சபாபதி தெக்ஷிணாமூர்த்தி  

    விஜயகாந்த் இயக்குனராக வாய்ப்பு வழங்கிய மற்றொரு பிலிமி இன்ஸ்டிட்யூட் மாணவர் சபாபதி தெக்ஷிணாமூர்த்தி.

    1992 ஆம் ஆண்டு வெளியான பரதன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று சபாபதியின் இயக்குனர் வாழ்க்கைக்கு அடித்தளம் இட்டது.

    அதன் பின்னர் அவர், எங்க தம்பி, சுந்தர புருஷன், விஐபி என பல வெற்றி படங்களை இயக்கினார்.

    லிவிங்ஸ்டன், ரம்பா நடிப்பில் உருவான சுந்தர புருஷன் திரைப்படம், 100 நாட்கள் ஓடி அவர்களது சினிமா வாழ்விலும், மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    5th card

    தேவன்- அருண்பாண்டியன்

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்த அருண்பாண்டியன், இயக்குனராக அவதாரம் எடுத்த திரைப்படம் தேவன்.

    கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில், போலீஸ் அதிகாரியாக எக்ஸ்டெண்டெட் கேமியோவில் விஜயகாந்த் நடித்து, படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று இருப்பார்.

    அதன் பின்னர் அருண்பாண்டியன் பெரிதாக திரைப்படங்களை இயக்கவில்லை என்றாலும், விஜயகாந்த் நடிப்பில் அவர் இயக்கிய தேவன் திரைப்படமே, அருண்பாண்டியனுக்குள் இருக்கும் இயக்குனருக்கான சாட்சி.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஜயகாந்த்
    தேமுதிக
    திரைப்படம்
    தமிழ் திரைப்படம்

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    விஜயகாந்த்

    "என் உயிரை நான் சந்தித்தபோது": கேப்டன் விஜயகாந்தை சந்தித்த இயக்குனர் S.A. சந்திரசேகர் கோலிவுட்
    தமிழகத்தில் புதிய நிலக்கரி சுரங்க விவகாரம் - எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த் அறிக்கை மத்திய அரசு
    வெளிநாட்டில் மாற்ற உடையின்றி தவித்த ரஜினிகாந்த்! என்ன நடந்தது? ரஜினிகாந்த்
    எந்த கூட்டணியுடனும் தற்போது செயல்படவில்லை: தேமுதிக அறிவிப்பு தேமுதிக

    தேமுதிக

    பாதயாத்திரை மேற்கொள்ளும் பாஜக அண்ணாமலை - தேமுதிக'விற்கு அழைப்பு  அமித்ஷா
    விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு - விஜயபிரபாகரன் பேட்டி விஜயகாந்த்
    பிறந்தநாளை முன்னிட்டு, நாளை  தொண்டர்களை சந்திக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்  சென்னை
    காவிரி விவகாரம் - தமிழக ஆளுநரை சந்தித்தார் பிரேமலதா விஜயகாந்த்  காவிரி

    திரைப்படம்

    அமீரின் 'மாயவலை' திரைப்படத்தின் டீசரை வெளியிடும் பிரபலங்கள் அமீர்
    கார்த்தியின் ஜப்பான் திரைப்படத்தின் ஓடிடி தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு  கார்த்தி
    ரஜினியின் முத்து VS கமலின் ஆளவந்தான்! திரைப்பட வெளியீடு
    மோகன்லால் நடிக்கும் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்தின் டீசர் வெளியானது மோகன்லால்

    தமிழ் திரைப்படம்

    வில்லனாக நடிப்பதில் இருந்து இடைவெளி எடுக்கிறேன்- விஜய் சேதுபதி விஜய் சேதுபதி
    இயக்குனர் அமீர்- ஞானவேல் ராஜா சர்ச்சை குறித்து சுதா கொங்கரா கருத்து கார்த்தி
    அமீர்- ஞானவேல் ராஜா சர்ச்சையால், வெற்றிமாறனின் வாடிவாசலுக்கு சிக்கல்? நடிகர் சூர்யா
    டிசம்பர் 8ல் வெளியாகும் துருவ நட்சத்திரம் திரைப்படம் விக்ரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025