Page Loader
12  வயதிலேயே இயக்குனரான  கும்பகோணம் பள்ளி மாணவி
இளம் வயதில் இயக்குனரான பள்ளி மாணவி

12 வயதிலேயே இயக்குனரான கும்பகோணம் பள்ளி மாணவி

எழுதியவர் Venkatalakshmi V
Feb 17, 2023
06:16 pm

செய்தி முன்னோட்டம்

கும்பகோணத்தை சேர்ந்த 12 வயதான பள்ளி மாணவி அகஸ்தி. 7-ஆம் வகுப்பு படிக்கும் இவர், அனிமேஷன் படம் ஒன்றை இயக்கியுள்ளார். 'குண்டன் சட்டி' என்று பெயரிடப்பட்ட அந்த படத்தை இவர் 8 மாதங்களில் இயக்கியுள்ளார். தொழில்நுட்ப வல்லுனர்களுடன் இணைந்து இவர் காட்சிகளை வடிவமைத்துள்ளார். அரசாங்கன் சின்னத்தம்பி என்பவர் இந்த படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியுள்ளார். ஏ.ஸ். கார்த்திகேயன் என்பவர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அமர்கீத் என்பவர் இசையமைத்துள்ளார். கும்பகோணத்தில் உள்ள கிராமத்தில் உள்ள இரு நண்பர்கள், குண்டேஸ்வரன் மற்றும் சட்டிஸ்வரன். உருவகேலிக்கு ஆளாகும் இவ்விருவரும், அந்த ஊர்மக்களை எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பது தான் இந்த அனிமேஷன் கதையின் முக்கிய கரு.

ட்விட்டர் அஞ்சல்

இயக்குனரான பள்ளி மாணவி