Loading...
72வது தேசிய விருதுகளில் மாஸ் காட்டிய கோலிவுட்! அமரன், ராயன், கேப்டன் மில்லர் படங்களுக்கு கிடைத்த உயரிய கௌரவம்
72வது தேசியத் திரைப்பட விருதுகள் 2026

72வது தேசிய விருதுகளில் மாஸ் காட்டிய கோலிவுட்! அமரன், ராயன், கேப்டன் மில்லர் படங்களுக்கு கிடைத்த உயரிய கௌரவம்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 18, 2026
06:40 pm

செய்தி முன்னோட்டம்

ஜூலை 18 அன்று அறிவிக்கப்பட்ட 72வது தேசியத் திரைப்பட விருதுகளில் தமிழ் திரையுலகம் விருதுகளைக் குவித்துள்ளது. அமரன் படத்திற்காக ராஜ்குமார் பெரியசாமி சிறந்த இயக்குனராகவும், ஆர். கலைவாணன் சிறந்த எடிட்டராகவும் தேர்வாகினர். இப்படத்திற்கு சிறந்த பின்னணி இசை விருதும் ஜிவி பிரகாஷ் குமாருக்கு கிடைத்துள்ளது. தனுஷின் ராயன் சிறந்த தமிழ் படமாகவும், கேப்டன் மில்லர் சமூக விழுமியங்களை ஊக்குவிக்கும் சிறந்த படமாகவும் தேர்வாகின. மகாராஜா படத்தின் சச்சனா நமிதாஸ் சிறந்த துணை நடிகையாகவும், மெய்யழகன் சுரேஷ் ஜி சிறப்பு சான்றையும் பெற்றனர்.

விருதுகள்

நான்-ஃபீச்சர் பிரிவில் தமிழ் சாதனைகள்

நான்-ஃபீச்சர் மற்றும் ஆவணப்படப் பிரிவுகளிலும் தமிழ் படைப்புகள் முத்திரை பதித்துள்ளன.

புளூ (Blue) தமிழ் படத்திற்காக டிஎஸ் ஹரிஹரசுதனுக்கு சிறந்த சவுண்ட் டிசைன் விருது கிடைத்துள்ளது.

மேலும், தமிழ் உட்பட பல மொழிகளில் உருவான லைஃப் இன் லூம் (Life in Loom) ஆவணப்படத்திற்காக எட்மண்ட் ரான்சனுக்கு சிறந்த ஒளிப்பதிவு விருது வழங்கப்பட்டுள்ளது.

நடுவர் குழு

நடுவர் குழு மற்றும் தகுதி வரம்புகள்

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, புகழ்பெற்ற மலையாள திரைப்பட இயக்குனர் ஜெயராஜ் தலைமையிலான 11 பேர் கொண்ட மத்திய நடுவர் குழுவினர் இந்த விருதுப் பட்டியலைத் தேர்வு செய்துள்ளனர்.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் சென்சார் போர்டால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்கள் இந்த 72வது தேசிய விருதுகளின் தகுதிப் பட்டியலின்கீழ் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு இந்த இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

முக்கிய விருதுகள்

இந்திய அளவிலான முக்கிய விருதுகள் பெற்றவர்களின் விபரம் ((Feature Categories))

சிறந்த திரைப்படத் தயாரிப்பு (Best Feature Film): ஆர்டிகிள் 370 (இந்தி)

சிறந்த நடிகர் (பகிர்வு): கார்த்திக் ஆர்யன் (சந்து சாம்பியன் - இந்தி) & மம்மூட்டி (பிரம்மயுகம் - மலையாளம்)

சிறந்த நடிகை: யாமி கௌதம் (ஆர்டிகிள் 370 - இந்தி)

சிறந்த இயக்குனர்: ராஜ்குமார் பெரியசாமி (அமரன் - தமிழ்)

சிறந்த தமிழ் திரைப்படம்: ராயன் (இயக்கம்: தனுஷ் - தமிழ்)

சிறந்த துணை நடிகை (பகிர்வு): சச்சனா நமிதாஸ் (மகாராஜா - தமிழ்) & ரூபஸ்ரீ வர்காடி (மித்யா - கன்னடம்)

சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்: கல்கி 2898 AD (தெலுங்கு)

சமூக விழுமியங்களை ஊக்குவித்த படம்: கேப்டன் மில்லர் (தமிழ்)

ADVERTISEMENT

முக்கிய விருதுகள்

இந்திய அளவிலான முக்கிய விருதுகள் பெற்றவர்களின் விபரம் ((Feature Categories))

சிறந்த பின்னணி இசை (Background Score): ஜிவி பிரகாஷ் குமார் (அமரன் - தமிழ்)

சிறந்த எடிட்டிங்: ஆர். கலைவாணன் (அமரன் - தமிழ்)

சிறந்த திரைக்கதை: சுகுமார் (புஷ்பா 2 - தெலுங்கு)

சிறந்த ஆடை வடிவமைப்பு: தீபாலி நூர் & ஷீத்தல் சர்மா (புஷ்பா 2 - தெலுங்கு)

சிறந்த நடன அமைப்பு (Choreography): ஸ்த்ரீ 2 (இந்தி)

சிறப்புச் சான்று (Special Mention): மெய்யழகன் (சவுண்ட் மிக்ஸ் இன்ஜினியர்: சுரேன் ஜி - தமிழ்)

முக்கிய விருதுகள்

நான்-ஃபீச்சர் பிரிவில் வென்ற பிற முக்கிய விருதுகள் (Non-Feature Categories)

சிறந்த சவுண்ட் டிசைன்: டி எஸ் ஹரிஹர சுதன் - புளூ (தமிழ்)

சிறந்த ஒளிப்பதிவு: எட்மண்ட் ரான்சன் - லைஃப் இன் லூம் (தமிழ், ஆங்கிலம், இந்தி, அசாமி மற்றும் பெங்காலி)

சிறந்த ஆவணப்படம்: ராம்-நாமி (இயக்கம்: பாரத்பாலா கணபதி) - இந்தி

சிறந்த திரைப்படம் குறித்த புத்தகம்: 'நானிருவுதே நிமகாகி நாடிலுவுதே நனகாகி' (கன்னட சினிமா அரசியல் மற்றும் தத்துவம்) - கெஞ்சனூரு பிரதீப் குமார் ஷெட்டி.

தேசிய அளவில் தமிழ் திரையுலகின் கதைக்களங்களுக்கும் தொழில்நுட்பத் திறமைக்கும் கிடைத்துள்ள இந்த மாபெரும் அங்கீகாரத்திற்காக விருது வென்ற கலைஞர்கள் அனைவருக்கும் ஒட்டுமொத்தத் திரைத்துறையினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT