ராஷ்மிகா மந்தனாவின் 7 ஆண்டுகள் சினிமா பயணத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய நான்கு முக்கிய படங்கள்
செய்தி முன்னோட்டம்
தென்னிந்திய ரசிகர்களின் 'கிரஷ்ஷாக' இருந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் வெளியான அனிமல் திரைப்படத்தின் மூலம் தேசிய கிரஷ்ஷாக மாறி உள்ளார்.
'கிரிக் பார்ட்டி' என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர், இன்றுடன் சினிமாவில் தனது ஏழாவது ஆண்டை நிறைவு செய்கிறார்.
ஏழு வருட திரைப்பயணத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில், 19 திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.
இந்த ஏழு ஆண்டுகளில், அவருக்கு தேசிய அளவில் அங்கீகாரம் மற்றும் வெற்றியை வழங்கிய திரைப்படங்கள் ஒரு பார்வை.
2nd card
கிரிக் பார்ட்டி (2016)
சினிமா கலைஞர்களுக்கு அவர்களின் முதல் படம் அவ்வளவு எளிதாக வெற்றி படமாக அமையாது. ஆனால் ராஷ்மிகா அந்த விஷயத்தில் விதிவிலக்கு.
அவரின் முதல் படமான கிரிக் பார்ட்டி திரைப்படம், மாபெரும் வெற்றி பெற்று இன்றளவும் அதிக வசூலிட்டிய கன்னட படங்களில் ஒன்றாக உள்ளது.
இப்படத்தில் ரக்ஷித் ஷெட்டி, சம்யுக்தா ஹெக்டே, அச்யுத் குமார் மற்றும் அரவிந்த் ஐயர் ஆகியோர் நடித்திருந்த நிலையில், சான்வி ஜோசப் என்ற கல்லூரி மாணவியாக மந்தனா நடித்தார்.
கிரிக் பார்ட்டி திரைப்படம் இன்றளவிலும் ஐஎம்டிபி-இல் 8.3/10 மற்றும் ராட்டன் டொமாட்டோஸில் 95% ரேட்டிங்கை பெற்றுள்ளது.
3rd card
கீதா கோவிந்தம் (2018)
ராஷ்மிகா மந்தனாவின் தற்போதைய காதலர் எனக் கூறப்படும் விஜய் தேவரகொண்டா உடன், அவர் நடித்த ரொமான்டிக் காமெடி திரைப்படம் கீதா கோவிந்தம்.
பரசுராம் இயக்கியிருந்த இப்படம், கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் வணிக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்று, ராஷ்மிகாவின் நடிப்புக்கு எடுத்துக்காட்டாக இன்றளவும் பேசப்படுகிறது.
படத்தின் கிளைமாக்ஸ் இல், அவரின் எமோஷனல் காட்சிகளுக்கு திரையரங்கில் கைதட்டாதவர்கள் இருக்கவே முடியாது எனக் கூறலாம்.
பார்க்கவில்லையா? ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது
4th card
புஷ்பா: தி ரைஸ் (2021)
ராஷ்மிகா தனது அடுத்த அடுத்த படங்களான டியர் காம்ரேட், சுல்தான் ஆகிய படங்கள் மூலம் தன்னை நிரூபித்து வந்தாலும், புஷ்பா: தி ரைஸ் திரைப்படத்தின் மூலம் அவர் பேன் இந்தியா நாயகியாக உயர்ந்தார்.
படத்தில் அவர் பேசும் வசனங்கள், ஸ்ரீவள்ளி மற்றும் சாமி சாமி பாடல்களில் அவரின் நடனம், மற்றும் அல்லு அர்ஜுன் உடனான கெமிஸ்ட்ரி, ஆகியவை அவருக்கு நற்பெயரை வாங்கி தந்தது.
அடுத்த ஆண்டு வெளியாகும், புஷ்பா இரண்டாம் பாகத்திலும் அவர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
5th card
அனிமல்(2023)
குட்பை மற்றும் மிஷன் மஜ்னு ஆகிய திரைப்படங்கள் மூலம் பாலிவுட்டில் ராஷ்மிகா ஏற்கனவே கால் பதித்திருந்தாலும், சந்தீப் ரெட்டி வங்காவின் அனிமல் திரைப்படம் முன்பு எப்போதும் இல்லாத புகழை அவருக்கு பெற்று தந்தது.
ரன்பீர் கபூர் மனைவி கீதாஞ்சலியாக, மந்தனா பல நட்சத்திரங்கள் நிறைந்த கேங்க்ஸ்டர் திரைப்படத்தில், தனக்கென தனி இடத்தை உண்டாக்கிக் கொண்டார்.
முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க பரினீதி சோப்ரா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், வங்கா அவரின் முடிவை மாற்றி ராஷ்மிகாவை நடிக்க வைத்தார்.
அந்த முடிவு ராஷ்மிகாவின் சினிமா வாழ்க்கையும், தலைகீழாக மாற்றிப் போட்டுள்ளது.