
68வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகராக கமல், தனுஷ் தேர்வு
செய்தி முன்னோட்டம்
2023ஆம் ஆண்டிற்கான சமீபத்திய சவுத் பிலிம்பேர் விருதுகள் நேற்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
சவுத் பிலிம்பேர் விருதுகள் தென்னிந்தியாவில் வெளியான சிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் விருதளிப்பது மரபு.
இந்த வகையில், சென்றாண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் சிறந்த திரைப்படமாகவும், சிறந்த நடிகருக்கான விருதை, விக்ரம் படத்தில் நடித்ததற்கு கமலுக்கும், கிரிட்டிக்ஸ் விருது தனுஷிற்கு வழங்கப்பட்டது.
கன்னடத்தில் சிறந்த படமாக காந்தாரா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல தெலுங்கில் சிறந்த படமாக RRR திரைப்படமும், மலையாளத்தின் சிறந்த படமாக ஞான் தானே கேஸ் கொடுத்து படமும் தேர்வாகியுள்ளது. இது தவிர சிறந்த நடிகை(தமிழ்) கார்கி படத்தில் நடித்தமைக்கு சாய் பல்லவிக்கும், பொன்னியின் செல்வன் படத்திற்கு இசையமைத்ததற்கு A.R.ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதும் வழங்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
பிலிம்பேர் விருதுகள்
68-வது Filmfare South விருதுகள் (தமிழ்) 2023#filmfareawards | #filmfareawards2023 | #filmfareTamil pic.twitter.com/MuaQd3tJGM
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) July 12, 2024