
#பூஜாஹெக்டே 33- 'பீஸ்ட்' நடிகை பற்றி உங்களுக்கு தெரியாத ஆறு விஷயங்கள்
செய்தி முன்னோட்டம்
தமிழில் 'முகமூடி' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை பூஜா ஹெக்டே இன்று தனது 33வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
தற்போது வரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பூஜா, தெலுங்கில் அல்லு அர்ஜுன் உடன் 'வைகுந்தபுரம்', பிரபாஸுடன் ' 'ராதே ஷ்யாம்', மற்றும் தமிழில் நடிகர் விஜய் உடன் 'பீஸ்ட்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததற்காக பிரபலமானவர்.
இந்த சமயத்தில் அவர் குறித்து பெரிதும் அறியப்படாத, அதே சமயம் சுவாரசியமான 6 விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
சுமார் 10 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும் பூஜா, கடந்த 2012 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
2nd card
தாயின் கனவை நிறைவேற்றிய பூஜா ஹெக்டே!
நடிகை பூஜா, 2009 ஆம் ஆண்டு நடந்த 'மிஸ் இந்தியா' நிகழ்ச்சியில் பங்கேற்று 'ஃபெமினா மிஸ் டேலெண்டெட்' என்ற பட்டத்தை வென்றார்.
பூஜாவின் தாய் அவரது தந்தையால் பரதநாட்டியம் கற்றுக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை எனவும், இருந்த போதும், தான் பரதம் கற்றுக்கொண்டு, அவரின் கனவை நிறைவேற்றியதாகவும் கூறியிருந்தார்.
ஹிந்தி, ஆங்கிலம் தவிர தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்ட மொழிகளை சரளமாக பேசக் கூடியவர் நடிகை பூஜா.
தான் மிகப்பெரிய ஹாரிபாட்டர் ரசிகை என ஒரு முறை அவர் பதிவு செய்திருந்தார்.
நடிகை பூஜா, டைம்ஸ் நாளிதழ் வெளியிடும், இந்தியாவில் மிகவும் விரும்பத்தக்க பெண்களின் பட்டியலில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார்.