Page Loader
'ஜென்டில்மேன்' திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு - கொண்டாடிய ஷங்கர் 
'ஜென்டில்மேன்' திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு - கொண்டாடிய ஷங்கர்

'ஜென்டில்மேன்' திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவு - கொண்டாடிய ஷங்கர் 

எழுதியவர் Nivetha P
Jul 30, 2023
06:42 pm

செய்தி முன்னோட்டம்

ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1993ம் ஆண்டு அர்ஜுன், மதுபாலா ஜோடியாக நடித்து வெளியான திரைப்படம் 'ஜென்டில்மேன்'. இப்படத்தின் மூலம் ஷங்கர் இயக்குனராக அறிமுகமானார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான இப்படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியில் பெரும் வெற்றியினை பெற்றது. இந்நிலையில் இப்படம் வெளியாகி இன்றோடு(ஜூலை.,30) 30 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது. அதன்படி ட்விட்டரில் #30YearsofGentlemen என்னும் ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. மேலும் ரசிகர்கள் இப்படத்தின் சில காட்சிகள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை இணையத்தில் பதிவு செய்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே, இப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் இயக்குனர் ஷங்கர் தனது உதவியாளர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி வருகிறார்.

ட்விட்டர் அஞ்சல்

உதவியாளர்களுடன் கொண்டாட்டத்தில் இயக்குநர் ஷங்கர்