Page Loader
7 அதிசயங்களை கண் முன்னே காட்டிய ஜீன்ஸ் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிறது!
பிரஷாந்த்- ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான ஜீன்ஸ் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது

7 அதிசயங்களை கண் முன்னே காட்டிய ஜீன்ஸ் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிறது!

எழுதியவர் Venkatalakshmi V
Apr 24, 2023
09:34 am

செய்தி முன்னோட்டம்

1998இல், ஷங்கர் இயக்கத்தில் வெளியான தமிழ் திரைப்படம் 'ஜீன்ஸ்'. அந்த படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அந்த படத்தை பற்றி சில சுவாரசிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். அன்றைய காலகட்டத்தில், 19 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்டது. அப்போதைக்கு அது மிகவும் காஸ்டலி பட்ஜெட்தான். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர், பிரபல டென்னிஸ் வீரரும், தயாரிப்பாளருமான அஷோக் அமிர்தராஜ். ஜீன்ஸ் படத்தின் கதை முடிவான பிறகு, அந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் அஜித்குமார் தான். ஆனால் பல காரணங்களால், அவர் அதில் நடிக்க முடியாமல் போகவே, ஷங்கரின் இயக்கத்தில் ஏற்கனவே நடித்திருந்த பிரபுதேவாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அவரும் நடிக்க முடியாது போனதால், இறுதியில் டிக் அடிக்கப்பட்டது பிரஷாந்தின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

card 2

படத்தின் பெயர் காரணம் தெரிந்துகொள்ளுங்கள்

படத்தில் முக்கியமான கருவாக கருதப்படும் இரைட்டையர் genes தான், பின்னர், Jeans (ஜீன்ஸ்) என பெயராக வைக்கப்பட்டது. இந்த படத்திற்கான தொடக்க பூஜைக்கு, டெனிம் துணியில் செய்யப்பட்ட பிரத்தேயேக பத்திரிக்கை, முக்கிய பிரபலங்களுக்கு வழங்கப்பட்டது. அதேபோல, படத்தின் முக்கிய நடிகர்களும், பெயருக்கேற்றார் போல, ப்ளூ நிற ஜீன்ஸ் அணிந்து வந்திருந்தனர். படத்தில் உட்படுத்தப்பட்ட VFX காட்சிகள், இந்தியாவில் அதுதான் முதன்முறை. படத்தின் ஷூட்டிங் பல முக்கிய காட்சிகள் அமெரிக்காவின் பல பிரபல நகரங்களிலும், 7 அதிசயங்களில் எடுக்கப்பட்டது. இந்த படம் மூலமாக ராஜு சுந்தரம் நடிகர் அவதாரம் எடுத்தார். படத்தில் S .Ve .சேகர் கதாபாத்திரத்திற்கு முதலில் பாடகர் SPB தான் நடிப்பதாக இருந்தது எனவும் செய்திகள் கூறுகின்றன.