Page Loader
21 ஆண்டுகள் திரையுலக பயணத்தில் தனுஷ்: அவர் அபார நடிப்பில் வெளியான சில படங்கள்
தன்னுடைய 21 ஆண்டுகள் திரையுலக பயணத்தில் பலவிதமான அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்

21 ஆண்டுகள் திரையுலக பயணத்தில் தனுஷ்: அவர் அபார நடிப்பில் வெளியான சில படங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
May 13, 2023
09:24 am

செய்தி முன்னோட்டம்

'நடிப்பு அசுரன்' என்று 'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவே புகழாரம் சூட்டிய நடிகர், தனுஷ். ஒல்லியான உடம்பு, மாநிறம், என ஹீரோக்களின் எந்த அம்சமும் இல்லாமல் திரையுலகில் நுழைந்து, இப்போதோ அவரின் உருவமே ஒரு 'ஐகான்' என மாறியுள்ளது. 'துள்ளுவதோ இளமை' என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் தனுஷ். அந்த சரித்திர சம்பவம் நடந்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டது. 'தன்னை தானே செதுக்கியவன்' என்று தனுஷை கூறலாம். இந்த தருணத்தில், அவரின் அபார நடிப்பில் வெளியான சில படங்களின் பட்டியல் இதோ: காதல் கொண்டேன்: முதல் படத்தில் சந்தித்த அவமானங்களை எல்லாம், இந்த படத்தின் மூலம் தவிடு பொடியாக்கினார் தனுஷ். காதல், ஏக்கம், அவமானம் என பலவித உணர்ச்சிகளை அனாயசமாக வெளிக்காட்டி இருப்பார்.

card 2

வெற்றிமாறன், செல்வராகவன் கூட்டணியில் வேறு பரிமாணத்தை வெளிக்காட்டும் தனுஷ்

பொல்லாதவன்: பொறுப்பில்லாத ஒரு இளைஞன், தான் ஆசைப்பட்ட ஒரு பொருளை தேடி அலையும் போதும், அதற்காக அவன் பல தடைகளை தகர்க்க நேரும் போதும் அவனுக்குள் ஏற்படும் உணர்ச்சி போராட்டம் தான் கதை. யாரடி நீ மோஹினி: முதல் பாதியில் காமெடி காதலன், இரண்டாம் பாதியில் மறுகும் நண்பன் என கலக்கி இருப்பார் தனுஷ் ராஞ்சனா: அவரின் முதல் பாலிவுட் படம். ஆனாலும் மிரள வைக்கும் நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். ஆடுகளம்: தனுஷின் நடிப்பிற்கு தேசிய விருதை வாங்கி தந்த படம் இது. மதுரை மண்ணின் மைந்தனாகவே வாழ்ந்திருப்பார். அசுரன்: 50 வயது முதியவர் சிவசாமியாக அனைவரையும் அசரடித்த திரைப்படம் இது.