NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வணிகம் செய்தி / $6 பில்லியன் திரட்டியது எலான் மஸ்க்கின் AI ஸ்டார்ட்அப்பான xAI 
    அடுத்த செய்திக் கட்டுரை
    $6 பில்லியன் திரட்டியது எலான் மஸ்க்கின் AI ஸ்டார்ட்அப்பான xAI 

    $6 பில்லியன் திரட்டியது எலான் மஸ்க்கின் AI ஸ்டார்ட்அப்பான xAI 

    எழுதியவர் Sindhuja SM
    May 27, 2024
    03:59 pm

    செய்தி முன்னோட்டம்

    எலான் மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப்பான xAI, தொடர் B நிதிச் சுற்றில் $6 பில்லியன்களை வெற்றிகரமாக திரட்டியது.

    இந்த அறிவிப்பு நேற்று ஒரு அதிகாரபூர்வ வலைப்பதிவு இடுகை மூலம் வெளியிடப்பட்டது.

    ஆண்ட்ரீசென் ஹோரோவிட்ஸ் மற்றும் செக்வோயா கேப்பிடல் போன்ற உயர்மட்ட முதலீட்டாளர்கள் xAIயின் நிதியுதவி சுற்றுக்கு ஆதரவளித்தனர்.

    வேலர் ஈக்விட்டி பார்ட்னர்ஸ், வை கேபிடல், ஃபிடிலிட்டி மேனேஜ்மென்ட் & ரிசர்ச் கம்பெனி மற்றும் பிரின்ஸ் அல்வலீத் பின் தலால் மற்றும் கிங்டம் ஹோல்டிங் போன்ற மற்ற பங்கேற்பாளர்களும் xAIக்கு நிதி அளித்துள்ளனர்.

    "வரவிருக்கும் வாரங்களில் இன்னும் பல அறிவிப்புகள் வெளியாகும்" என்று நிதியுதவி அறிவிப்பைத் தொடர்ந்து மஸ்க் கூறினார்.

    எலான் மஸ்க்

    xAIஇன் தயாரிப்புகளை சந்தைக்குக் கொண்டுவருவதற்கான நிதி

    இந்தச் சுற்றில் திரட்டப்படும் நிதியானது xAI இன் முதல் தயாரிப்புகளை சந்தைக்குக் கொண்டுவருதல், மேம்பட்ட உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்களின் ஆராய்ச்சியை தொடங்குதல் மற்றும் மேம்பாட்டை விரைவுபடுத்துதல் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும்.

    உடனடியாக தொழில்நுட்ப புதுப்பிப்புகள் மற்றும் தயாரிப்புகள் தொடங்கும் என்றும் xAI கூறியுள்ளது.

    ஓபன்ஏஐ போன்ற மேம்பட்ட AI தொழில்நுட்பத்திற்கு சவால் விடுவதை நோக்கமாகக் கொண்ட ஸ்டார்ட்அப்களுக்கு ஆதரவளிக்கும் எண்ணற்ற முதலீட்டாளர்களால் AI துறையில் போட்டி அதிகரித்து வருகிறது.

    B தொடர் நிதியுதவி சுற்றில், xAI இன் மதிப்பீடு $24 பில்லியனாக உள்ளது. மஸ்க்கின் கூற்றுப்படி, அந்த நிறுவனத்திற்கு $18 பில்லியன் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    எலான் மஸ்க்
    செயற்கை நுண்ணறிவு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    எலான் மஸ்க்

    விக்கிபீடியா பெயரை மாற்றினால் 1 பில்லியன் டாலர்கள் கொடுப்பதாக எலான் மஸ்க் பதிவு எக்ஸ்
    ஆடியோ மற்றும் வீடியோ கால்களை மேற்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்திய எக்ஸ் எக்ஸ்
    எக்ஸ் மூலம் நிதி சேவைகளை வழங்கத் தயாராகும் எலான் மஸ்க் எக்ஸ்
    பாலஸ்தீன உதவி குழுக்களுக்கு இணைய வசதியை வழங்க முன்வந்தது 'ஸ்டார்லிங்க்': எலான் மஸ்க் அறிவிப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    செயற்கை நுண்ணறிவு

    AI சாட்களை அணுகும் புதிய வசதியை சோதனை செய்து வரும் வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    மீண்டும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சிஇஓ-வாக சாம் ஆல்ட்மேனை நியமிக்க பரிசீலனை? சாட்ஜிபிடி
    புதிய சிஇஓ-வை நியமித்த ஓபன்ஏஐ; மைக்ரோசாஃப்டில் இணைந்த சாம் ஆல்ட்மேன்! மைக்ரோசாஃப்ட்
    மூன்று நாட்களில் மூன்று சிஇஓ மாற்றம்; குளறுபடிகளால் நிறைந்த ஓபன்ஏஐயில் என்ன நடக்கிறது? ஓபன்ஏஐ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025