Loading...
தங்கம் வாங்கலாமா வேண்டாமா? ஆறுதல் அளிக்கும் இன்றைய விலை நிலவரம்
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

தங்கம் வாங்கலாமா வேண்டாமா? ஆறுதல் அளிக்கும் இன்றைய விலை நிலவரம்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 08, 2026
12:48 pm

செய்தி முன்னோட்டம்

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இல்லாமல் நீடிக்கிறது. அதன்படி, சனிக்கிழமை (ஆகஸ்ட் 7), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹13,900 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,11,200 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹15,164 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹1,21,312 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையிலும் மாற்றமில்லை

18 காரட் தங்கத்தின் விலையிலும் இன்று மாற்றமில்லை.

அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹11,715 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

18 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹93,720 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே சனிக்கிழமை வெள்ளி விலையிலும் மாற்றம் ஏற்படவில்லை.

வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹250 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,50,000 ஆக விற்கப்படுகிறது.

ADVERTISEMENT