நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை குறைவு
செய்தி முன்னோட்டம்
நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹15 குறைந்து ₹13,950 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹120 குறைந்து ₹1,11,600 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹17 குறைந்து ₹15,218 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹136 குறைந்து ₹1,21,744 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் மாற்றமில்லை
18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது.
அதன்படி, 18 காரட் தங்கத்தின் விலை, தற்போது ஒரு கிராம் ₹15 குறைந்து ₹11,765 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
18 கேரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹120 குறைந்து ₹94,120 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே திங்கட்கிழமை வெள்ளி விலையில் மாற்றம் ஏற்படவில்லை.
வெள்ளி விலை தற்போதைய நிலவரப்படி ஒரு கிராம் ₹250 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ₹2,50,000 ஆக விற்கப்படுகிறது.