Loading...
டாடா குழுமத்தில் வெடித்துள்ள தலைமை போர்! சரிவில் டாடா பங்குகள்; என்.சந்திரசேகரன் நியமனத்திற்கு நோஃபெல் டாடா எதிர்ப்பது ஏன்?
டாடா குழுமத்தில் வெடித்துள்ள தலைமை போர்

டாடா குழுமத்தில் வெடித்துள்ள தலைமை போர்! சரிவில் டாடா பங்குகள்; என்.சந்திரசேகரன் நியமனத்திற்கு நோஃபெல் டாடா எதிர்ப்பது ஏன்?

எழுதியவர் Sekar Chinnappan
Sep 21, 2026
05:58 pm

செய்தி முன்னோட்டம்

டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ் அமைப்பின் தலைவராக என்.சந்திரசேகரனை மேலும் 5 ஆண்டுகளுக்கு மீண்டும் நியமிக்கும் முடிவிற்கு, அந்நிறுவனத்தின் 66% பங்குகளை வைத்துள்ள டாடா அறக்கட்டளை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட நிர்வாக சிக்கல்கள் காரணமாகத் திங்கட்கிழமை (செப்டம்பர் 21) வர்த்தகத்தில் டாடா கேபிட்டல், டாடா பவர், டாடா எல்க்ஸி உள்ளிட்ட பெரும்பாலான டாடா குழுமப் பங்குகள் 3% வரை சரிவை சந்தித்தன. கூடுதல் விபரங்கள் இங்கே:-

சட்டப்பூர்வ சிக்கல்

என்.சந்திரசேகரன் நியமனத்தில் வெடித்துள்ள சட்டப்பூர்வ சிக்கல்

டாடா சன்ஸ் விதிகளின்படி (AoA), அதன் தலைவரை நியமிக்க டாடா அறக்கட்டளை சார்பில் பரிந்துரைக்கப்படும் இரண்டு இயக்குநர்களும் கட்டாயம் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

சந்திரசேகரன் நியமனத்தின் போது, அறக்கட்டளை பரிந்துரைத்த இயக்குநர் நோஃபெல் டாடா எதிர்த்து வாக்களித்தார்.

மற்றொரு இயக்குநர் வேணு சீனிவாசன் ஆதரவாக வாக்களித்தார்.

இரு இயக்குநர்களின் ஒருமித்த ஆதரவு இல்லாததால், இந்த நியமனத் தீர்மானம் சட்டப்பூர்வமாக செல்லாது என டாடா அறக்கட்டளை வாதிடுகிறது.

டாடா அறக்கட்டளை வாதம்

டாடா அறக்கட்டளை வாதமும் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியின் கருத்தும்

தலைவர் வாக்கைப் பயன்படுத்தி இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது என்றும், இது நூற்றாண்டு பழமையான டாடா அறக்கட்டளையின் உரிமைகளை பறிக்கும் செயல் என்றும் நோஃபெல் டாடா தரப்பு குற்றம் சாட்டுகிறது.

இந்த வழக்கைக் கையில் எடுத்துள்ள மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, பங்குதாரர்களின் அடிப்படை உரிமைகளை புறக்கணிப்பது கார்ப்பரேட் நிர்வாகத்திற்கு பெரும் ஆபத்து என்றும், இந்த விவகாரம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திற்கு கொண்டு செல்லப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கியின் உத்தரவும் டாடா குழுமத்தின் எதிர்காலமும்

டாடா சன்ஸ் நிறுவனத்தை தனியார் நிறுவனமாகவே தொடர அனுமதிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நிராகரித்துள்ளதால், டாடா சன்ஸ் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட வேண்டிய (ஐபிஓ) கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தலைமைப் பதவி தொடர்பான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

சந்தையில் நிலவும் இந்த நிச்சயமற்ற தன்மையால் முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ள நிலையில், சட்டப் போராட்டங்களின் முடிவைப் பொறுத்தே டாடா பங்குகளின் அடுத்தகட்ட நகர்வு அமையும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

ADVERTISEMENT